மே.தீவுகளை வைட்வொஷ் செய்து இலங்கை மகளிர் அணி சாதனை

West Indies Women’s Tour of Sri Lanka 2024

56

மே.தீவுகள் மகளிர் அணியை 3-0 என வைட்வொஷ் செய்தது இலங்கை 

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 161 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 0 என வைட்வொஷ் (வெள்ளையடிப்பு) செய்து சாதனை படைத்துள்ளது. 

இதன்மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை ஒருநாள் தொடரொன்றில் முதல் தடவையாக வீழ்த்தி இலங்கை மகளர் அணி சாதனை படைத்தது 

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (21) நடைபெற்ற 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றனர் 

இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சமரி அத்தபத்து 106 பந்துகளில் 91 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 78 பந்துகளில் 63 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 46 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர். 

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியின் பந்துவீச்சில் கரிஷ்மா ரன்ஹரக் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இந்தநிலையில், 276 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக செடின் நேஷன் 46 ஓட்டங்களையும், ஆலியா எலென் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்துவீச்சில் தனது 3ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய 22 வயதான இடது கை சுழல்பந்து வீச்சாளர் சச்சினி நிசன்சலா 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் அதிசிறந்; பந்துவீச்சுப் பிரதியைப் அவர் பதிவு செய்தார்.    

இதற்கமைய, மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 160 ஓட்டங்களால் இமாலய வெற்றியைப் பதிவு செய்து ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகியாக கசச்சினி நிசன்சலா செய்யப்பட்டதோடு, தொடரின் ஆட்ட நாயகியாக விஷ்மி குணரத்னவும் தெரிவு செய்யப்பட்டார் 

இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் எதிர்வரும் 24ஆம் திகதி ஹம்பாந்தேட்டையில் நடைபெறவுள்ளமை குறிபப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<