இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டும் சாதனை படைப்போம் – பில் சிம்மென்ஸ்

210

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிச்சயம் சிறப்பாகச் செயல்படும் என்று அவ்வணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி முதல் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்று T20i போட்டிகளில் விளையாட உள்ளது

இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இந்த நிலையில், இங்கிலாந்து தொடர்களில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் கடந்த வாரம் இங்கிலாந்து சென்றடைந்தனர்

மென்செஸ்டர் நகரில் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்கள் முடிந்த பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். 

இதனிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் குறித்துப் பேசிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்று உறுதியாக சொல்ல முடியும். வீரர்கள் சிறந்த ஊக்கத்துடன் உள்ளனர்.  

எமது அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 400 அல்லது 500 ஓட்டங்களை எடுத்தால், பந்துவீச்சாளர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தி போட்டியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்” என்று கூறியுள்ளார்

அதேபோல, இங்கிலாந்து இரசிகர்கள் மைதானத்துக்கு வராத காரணத்தால் எம்மால் இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது” என்றும் தெரிவித்தார்.  

இதுஇவ்வாறிருக்க, டேரன் பிராவோ மற்றும் சிம்ரோன் ஹிட்மியர் ஆகிய இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து தொடரைப் புறக்கணித்தது பற்றி சிம்மன்ஸ் எதுவும் கூறவில்லை

”எங்கள் வீரர்கள் திறமையானவர்கள் என்பதில் முழு நம்பிக்கை உண்டு. துரதிஷ்டவசமாக சில வீரர்களால் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்க முடியவில்லை.

இருந்தாலும் திறமையானவர்களை நாங்கள் தேர்வு செய்து இங்குக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் வெற்றிபெற்று தொடரை வெல்லத் தயாராக உள்ளோம்” என்று சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்

“ஜொப்ரா ஆர்ச்சருடன் நட்பு இல்லை” – கெமார் ரோச்

”உலகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நிலைமை விரைவில் சீரடையும். நாங்கள் ஒன்றை மட்டும் மனதில் வைத்திருக்கிறோம். நாங்கள் விளையாடப் போவது உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிக்கு எதிராக

ஆகையால், அதற்குத் தேவையான முறையில் நாங்கள் எங்களின் திறமையை வெளிப்படுத்துவோம். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவும், போட்டியில் பங்கேற்கவும் ஆவலுடன் உள்ளனர்” என்று அவர் கூறினார்

மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<