பும்ராவின் சாகசத்தில் டெஸ்ட் தொடரையும் வைட்வொஷ் செய்த இந்தியா

176

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் 257 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. 

இந்த வெற்றியுடன் .சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் ஒரு தொடருக்கு வழங்கப்படும் முழுமையான புள்ளிகளான 120 புள்ளிகளையும் மொத்தமாக பைப்பற்றி இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அபார வெற்றியை பதிவுசெய்த இந்தியா

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே ……

இந்திய அணி ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 318 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 30ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக விக்கெட் காப்பாளரான ஜஹ்மார் ஹமில்டன் மற்றும் சகலதுறை வீரரும் உலகின் அதிக எடை கொண்ட வீர்ருமான ரகீம் கோன்வால் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தனர்

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஹனுமா விஹாரி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பெற்றுக் கொண்ட தத்தமது சிறந்த ஓட்டப் பிரதிகளின் மூலம் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 416 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது

துடுப்பாட்டத்தில் தனது கன்னிச் சதத்தை பூர்த்தி செய்த விஹாரி 111 ஓட்டங்களையும், அணித்தலைவர் கோஹ்லி, மயான்க் அகர்வால் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் அரைச் சதம் கடந்திருந்தனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் ரகீம் கோன்வால் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.  

தொடர்ந்து, தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட வீரர்களை தனது அபார பந்துவீச்சின் மூலம் திணறடிக்கச் செய்திருந்தார் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஹெட்ரிக் சாதனையையும் நிலைநாட்டியிருந்தார். இதன்மூலம், இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை புரிந்த மூன்றாவது வீரராக அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்

டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியின் தலைவர்களாக கில், சாஹா

தென்னாபிரிக்க ஏ அணியுடன் டெஸ்ட் போட்டியில்……..

தமது முதல் இன்னிங்ஸிற்காக 117 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை விட 299 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது

தொடர்ந்து 299 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்று தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பாக அஜின்கியா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் முறையே 64 மற்றும் 53 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.  

இதனால், 468 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்கள் பெற்றிருந்தது

வெற்றிக்கு மேலதிகமாக இன்னும் 423 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் நேற்று (2) நான்காவது நாள் ஆட்டத்தை தொடந்த மேற்கிந்திய தீவுகள் அணி 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் சமார் புரூக்ஸ் 50 ஓட்டங்களையும் ஹோல்டர் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதுடன் 23 ஓட்டங்கள் பெற்றிருந்த டெர்ரன் பிராவோ காயம் காரணமாக வெளியேறியிருந்ததுடன் அவருக்கு பிரதியீட்டு வீரராக களமிறங்கிய ஜேர்மைன் பிளக்வூட் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ………

பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹனுமா விஹாரி தெரிவு செய்யப்பட்டார். இவ்வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் வெற்றிகள் (28) பெற்ற இந்திய அணித்தலைவராக விராட் கோஹ்லி, முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது விஷேட அம்சமாகும். டோனி 27 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்திருந்தார்   

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 416 – விஹாரி 111, கோஹ்லி 76, சர்மா 57, அகர்வால் 55, ஹோல்டர் 77/5, கோன்வால் 105/3

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 117 – ஹிட்மேயர் 34, பும்ரா 27/6, ஷமி 34/2

இந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 168/4d – ரஹானே 64*, விஹாரி 53*, கிமார் ரோச் 28/3

மேற்கிந்திய தீவுகள் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 210 – புரூக்ஸ் 50, ஹோல்டர் 39, பிளக்வூட் 38, ஜடேஜா 58/3, ஷமி 65/3

போட்டி முடிவு : இந்தியா அணி 257 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<