ரோஹித்தின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

374
cricket

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கான கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று (04) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் டக்வேர்த் லுயிஸ் முறைப்படி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை குவித்துக் கொண்டது

டி20 அரங்கில் டில்சானின் சாதனையை முறியடித்த கோஹ்லி

இருதரப்பு தொடருக்காக ஐக்கிய அமெரிக்கா ……

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றிருந்தார். இப்போட்டியில் மூன்று சிக்ஸர்களை விளாசிய சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரராக 107 சிக்ஸர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயிலை பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கிறிஸ் கெயில் இதுவரை 105 சிக்ஸர்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அது தவிர கோஹ்லி 28, தவான் 23 மற்றும் குருநால் பாண்டியா ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்று அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர். பந்துவீச்சில் செல்டன் கொட்ரல் மற்றும் ஒசேன் தோமஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.  

முதலாவது போட்டியில் தோல்வியடைந்து தொடரில் 1-0 என பின்தங்கிய நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை தக்க வைக்கும் நோக்கில் 168 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. எனினும், மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த நிக்கலோஸ் புராண் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். இருவரும் இணைந்து 76 ஓட்டங்கள் பெற்றிருந்த போது புராண் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கஅதே ஓவரில் பவல் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்

அறிமுக வீரரின் அசத்தலில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ………….

போட்டியில் 15.3 ஓவர்கள் வீசப்படிருந்த நிலையில்  நான்கு விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்கள் பெற்றிருந்த போது திடீர் என குறுக்கிட்ட பயங்கரமான மின்னல் மற்றும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது டக்வேர்த் லுயிஸ் விதிகளுக்கமைய 22 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.  

போட்டி மீண்டும்  ஆரம்பிக்க முடியாத அளவுக்கு மழை பெய்ததால் போட்டியில் டக்வேர்த் லுயிஸ் விதிப்படி இந்திய அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2-0 என தொடரைக் கைப்பற்றியது

ஆட்டநாயகனாக இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் 20 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய குருநால் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (06) நடைபெறவுள்ளது

போட்டியின் சுருக்கம் 

இந்திய அணி 167/5 (20) – சர்மா 67, கோஹ்லி 28, கொட்ரல் 25/2, தோமஸ் 27/2

மேற்கிந்திய தீவுகள் அணி – 98/4  (15.3)- பவல் 54, புராண் 19, பாண்டியா 24/2, புவனேஷ்வர் குமார் 7/1

முடிவு : இந்திய அணி 22 ஓட்டங்களால் வெற்றி.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<