மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணி இரண்டு இளையோர் டெஸ்ட் மற்றும் மூன்று இளையோர் ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்றுப் பயணத்திற்காக இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.
இலங்கைக்கு வருகைத்தரவுள்ள மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணி ஆகஸ்ட் 27ம் திகதி முதல் செப்டம்பர் 15ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
>> வெற்றியுடன் LPL தொடரினை ஆரம்பித்த நடப்புச் சம்பியன்கள்
முதலில் ஆரம்பமாகும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 27, 30 மற்றும் செப்டம்பர் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், இளையோர் டெஸ்ட் போட்டிகள் செப்டம்பர் 5ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.
குறித்த இந்த தொடருக்கான மைதானங்கள் தொடர்பிலான அறிவிப்புகள் வெளியாகாத போதும், தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டி அட்டவணை
- ஆகஸ்ட் 27 – முதல் ஒருநாள் போட்டி
- ஆகஸ்ட் 30 -2வது ஒருநாள் போட்டி
- செப்டம்பர் 01 – 3வது ஒருநாள் போட்டி
- செப்டம்பர் 05-08 – முதல் நான்கு நாள் போட்டி
- செப்டம்பர் 12 – 05 – 2வது நான்கு நாள் போட்டி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<