Home Tamil புலிந்து பெரேராவின் அபார ஆட்டத்துடன் இளையோர் தொடரை வென்றது இலங்கை

புலிந்து பெரேராவின் அபார ஆட்டத்துடன் இளையோர் தொடரை வென்றது இலங்கை

West Indies U19 Tour of Sri Lanka 2023

327

மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான மூன்றாவது இளையோர் ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்துள்ளது. 

தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் புலிந்து பெரேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலையில் மாற்றம்!

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய புலிந்து பெரேரா தனியாளாக இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். மிகச்சிறப்பாக ஆடிய இவர் 140 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 17 பௌண்டரிகள் அடங்கலாக 155 ஓட்டங்களை விளாசினார். 

இவரை தவிர்த்து விஹாஷ் தெவ்மிக 28 ஓட்டங்களையும், ரவிசான் நெத்சரா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இலங்கை இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நேதன் எட்வர்ட்ஸ் 3 விக்கெட்டுகளையும், டெஸ்வான் ஜேம்ஸ் மற்றும் டாரிக் எட்வர்ட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் கடினமான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. அட்ரியன் வியர் 41 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசியதுடன், ஜோர்டன் ஜோன்சன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 

இவர்களையடுத்து ஓட்டங்கள் பெறப்பட்டுவந்த போதும், தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் சரிக்கப்பட்டன. இதில் ஜெவவ் என்ரு தனித்து நின்று 64 பந்துகளில் 80 ஓட்டங்களை விளாசினார். எவ்வாறாயினும் அடுத்துவந்த வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க இலங்கை 40.3 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை விஷ்வ லஹிரு 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியதுடன் கருக சங்கெத் மற்றும் சினெத் ஜயவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலமாக சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை இளையோர் அணி 2-1 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Result


Sri Lanka U19
304/8 (50)

West Indies U19
253/10 (40.3)

Batsmen R B 4s 6s SR
Pulindu Perera c Nathan Sealy b Nathan Edward 155 140 17 4 110.71
Vishen Halambage c & b Tarrique Edward 19 13 4 0 146.15
Sineth Jayawardena c Stephan Pascal b Tarrique Edward 15 28 1 0 53.57
Ravishan Nethsara c Stephan Pascal b Isai Thorne 27 42 4 0 64.29
Supun Waduge c Joshua Dorne b Nathan Edward 3 10 0 0 30.00
Dinura Kalupahana c Tarrique Edward b Nathan Edward 13 8 3 0 162.50
Sharujan Shanmuganathan c Adrian Weir b Deshawn James 16 18 1 0 88.89
Malsha Tharupathi c Nathan Edward b Deshawn James 7 5 1 0 140.00
Vihas Thewmika not out 28 30 3 0 93.33
Vishva Lahiru not out 7 11 0 0 63.64


Extras 14 (b 5 , lb 1 , nb 5, w 3, pen 0)
Total 304/8 (50 Overs, RR: 6.08)
Bowling O M R W Econ
Nathan Edward 9 0 66 3 7.33
Deshawn James 10 0 70 2 7.00
Tarrique Edward 10 0 41 2 4.10
Nathan Sealy 9 0 54 0 6.00
Isai Thorne 10 0 52 1 5.20
Mavendra Dindyal 2 0 15 0 7.50


Batsmen R B 4s 6s SR
Adrian Weir c Sineth Jayawardena b Garuka Sanketh 52 41 7 2 126.83
Stephan Pascal c Dinura Kalupahana b Vishva Lahiru 5 5 1 0 100.00
Joshua Dorne c Sharujan Shanmuganathan b Vishen Halambage 34 28 4 1 121.43
Jordan Johnson c Vishva Lahiru b Sineth Jayawardena 14 11 0 1 127.27
Mavendra Dindyal b Sineth Jayawardena 21 32 2 0 65.62
Jewel Andrew lbw b Vishwa Lahiru 80 64 8 4 125.00
Nathan Sealy c Vishwa Lahiru b Vihas Thewmika 20 29 1 0 68.97
Tarrique Edward lbw b Vishwa Lahiru 7 15 0 0 46.67
Nathan Edward b Vihas Thewmika 2 9 0 0 22.22
Isai Thorne b Garuka Sanketh 8 7 2 0 114.29
Deshawn James not out 0 2 0 0 0.00


Extras 10 (b 0 , lb 0 , nb 0, w 10, pen 0)
Total 253/10 (40.3 Overs, RR: 6.25)
Bowling O M R W Econ
Garuka Sanketh 9 0 44 2 4.89
Dinura Kalupahana 3 0 31 0 10.33
Vishva Lahiru 8.3 0 48 3 5.78
Malsha Tharupathi 4.5 0 38 0 8.44
Vishen Halambage 8.1 1 34 1 4.20
Sineth Jayawardena 3 0 29 2 9.67
Vihas Thewmika 4 0 29 2 7.25



>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<