மேற்கிந்திய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் நேற்று அவுஸ்திரேலியா மற்றும் தென் அபிரிக்க அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நேற்று பகல் – இரவு போட்டியாக சென் கிட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கையிடம் இருந்த போட்டியின் போக்கு இங்கிலாந்திடம்
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா 288/6 (50)
டேவிட் வோர்னர் 109
உஸ்மான் கவாஜா 59
ஸ்டீவ் ஸ்மித் 52*
இம்ரான் தாஹிர் 45/2
தென் ஆபிரிக்கா 252/10 (47.4)
பெப் டுப்லசிஸ் 63
ஹசீம் அம்லா 60
டுமினி 41
மிட்சல் ஸ்டார்க் 43/3
ஜொஸ் ஹெசல்வூட் 52/3
இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக சதம் அடித்த டேவிட் வோர்னர் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வெற்றி இந்த தொடரில் அவுஸ்திரேலியா பெற்ற 2ஆவது வெற்றியாகும். அத்தோடு இத்தோல்வி இந்த தொடரில் தென் ஆபிரிக்கா அடைந்த 2ஆவது தோல்வியாகும். இத்தொடரின் அடுத்த போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்