மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் முக்கிய மாற்றமாக முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரர்கள் பரிந்துரையில் கமிந்து, பிரபாத்
இந்திய அணிக்கு எதிரான தொடரில் தசுன் ஷானகவுக்கு பதிலாக அறிமுகமாகிய சமிந்து விஜேசிங்க தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
தசுன் ஷானக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ கடந்த ஜனவரி மாதத்துக்கு பின்னர் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். இவருடன் ஒருநாள் குழாத்தில் மாத்திரம் இணைக்கப்பட்டிருந்த ஜெப்ரி வெண்டர்சே ருநாள் குழாத்தில் மாத்திரம் இணைக்கப்பட்டிருந்த ஜெப்ரி வெண்டர்சே T20I குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்த தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, மஹீஷ் தீக்ஷன, கமிந்து மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹஸரங்க போன்ற வீரர்கள் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமின்றி உபாதைகளிலிருந்து குணமடைந்துள்ள மதீஷ பதிரண மற்றும் நுவான் துஷார ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், டில்சான் மதுசங்க, துஷ்மந்த சமீர மற்றும் ரமேஷ் மெண்டிஸ் போன்ற வீரர்கள் அணியிலிருந்து வாய்ப்பை இழந்துள்ளனர்.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 13, 15 மற்றும் 17ம் திகதிகளில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை T20I குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வெண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, நுவான் துஷார, மதீஷ பதிரண, பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<