சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணி பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தோடு வலுப்பெற்றிருக்கின்றது.
>>இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து ஐந்து வீரர்கள் விடுவிப்பு
ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – மேற்கிந்திய தீவுகள் மோதுகின்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நிறைவடைந்த நிலையில், அப்போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (29) மழையின் குறுக்கீட்டுக்குப் பின்னர், முதல் நாள் மதிய போசண இடைவேளையினை அடுத்து காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
மொத்தம் 45 ஓவர்களே வீசப்படும் என குறிப்பிடப்பட்ட இன்றைய போட்டியின் முதல் நாளில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றிருந்தார்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் சரித் அசலங்க இலங்கையின் 157ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகம் பெற, வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, அஞ்செலோ மெதிவ்ஸ், ஒசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, ரமேஷ் மெண்டிஸ், லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், பிரவீன் ஜயவிக்ரம
இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியில் ரஹ்கீம் கோர்ன்வோல், ஷனோன் கேப்ரியல், ஜெரேமி ஷொலசானோ ஆகியோருக்குப் பதிலாக வீரசம்மி பெர்மோல், ஷேய் ஹோப் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி – கிரைக் பிராத்வைட் (தலைவர்), ஜேர்மைன் பிளக்வூட், குரூமா போனர், ஷேய் ஹோப், ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ், ஜசூவா டி சில்வா, ஜோமல் வரிகன், ரொஸ்டன் சேஸ், வீரசம்மி பெர்மோல், கேமர் ரோச்
தொடர்ந்து போட்டியினை ஆரம்பம் செய்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்த அணித்தலைவர் திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர்.
நீண்ட நேரம் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி தந்த இலங்கையின் ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி, முதல் விக்கெட்டுக்காக 106 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
>>டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் தொடர் வெற்றியை நோக்கி களமிறங்கும் இலங்கை!
இலங்கையின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த திமுத் கருணாரட்ன அரைச்சதம் ஒன்றினை எதிர்பார்த்த நிலையில், சுழல் பந்துவீச்சாளரான ரொஸ்டன் சேஸின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்த டெஸ்ட் போட்டியில் 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பெதும் நிஸ்ஸங்க டெஸ்ட் போட்டிகளில் தான் பதிவு செய்த மூன்றாவது அரைச்சதத்துடன் இலங்கை அணியினை வலுப்படுத்தினார்.
இலங்கை அணி பெதும் நிஸ்ஸங்க பதிவு செய்த அரைச்சதத்துடன் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சன்மையினால் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணி 34.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 113 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் பெதும் இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்களில் பெதும் நிஸ்ஸங்க 61 ஓட்டங்களைப் பெற்றிருக்க, ஒசத பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Veerasammy Permaul | 73 | 148 | 0 | 0 | 49.32 |
Dimuth Karunaratne | c & b Roston Chase | 42 | 90 | 0 | 0 | 46.67 |
Oshada Fernando | c Joshua Da Silva b Jomel Warrican | 18 | 27 | 0 | 0 | 66.67 |
Angelo Mathews | b Jomel Warrican | 29 | 45 | 0 | 0 | 64.44 |
Dhananjaya de Silva | c Joshua Da Silva b Veerasammy Permaul | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Charith Asalanka | c Nkrumah Bonner b Veerasammy Permaul | 10 | 15 | 0 | 0 | 66.67 |
Dinesh Chandimal | lbw b Jomel Warrican | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Ramesh Mendis | c Shai Hope b Jomel Warrican | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Suranga Lakmal | c Jomel Warrican b Veerasammy Permaul | 12 | 20 | 0 | 0 | 60.00 |
Lasith Embuldeniya | b Veerasammy Permaul | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Praveen Jayawickrama | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 0 , lb 7 , nb 3, w 0, pen 0) |
Total | 204/10 (61.3 Overs, RR: 3.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 6 | 2 | 12 | 0 | 2.00 | |
Jason Holder | 8 | 2 | 23 | 0 | 2.88 | |
Kyle Mayers | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Veerasammy Permaul | 13 | 3 | 35 | 5 | 2.69 | |
Roston Chase | 14 | 0 | 64 | 1 | 4.57 | |
Jomel Warrican | 18.3 | 5 | 50 | 4 | 2.73 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | b Lasith Embuldeniya | 72 | 185 | 0 | 0 | 38.92 |
Jermaine Blackwood | lbw b Praveen Jayawickrama | 44 | 99 | 0 | 0 | 44.44 |
Nkrumah Bonner | lbw b Ramesh Mendis | 35 | 95 | 0 | 0 | 36.84 |
Shai Hope | lbw b Ramesh Mendis | 22 | 89 | 0 | 0 | 24.72 |
Roston Chase | c Pathum Nissanka b Ramesh Mendis | 10 | 33 | 0 | 0 | 30.30 |
Kyle Mayers | not out | 36 | 58 | 0 | 0 | 62.07 |
Jason Holder | lbw b Ramesh Mendis | 4 | 10 | 0 | 0 | 40.00 |
Joshua Da Silva | b Ramesh Mendis | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kemar Roach | c Dhananjaya de Silva b Praveen Jayawickrama | 8 | 9 | 0 | 0 | 88.89 |
Veerasammy Permaul | b Lasith Embuldeniya | 15 | 38 | 0 | 0 | 39.47 |
Jomel Warrican | c Chamika Karunaratne b Ramesh Mendis | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Extras | 6 (b 0 , lb 0 , nb 6, w 0, pen 0) |
Total | 253/10 (104.2 Overs, RR: 2.42) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 9 | 3 | 22 | 0 | 2.44 | |
Lasith Embuldeniya | 35 | 13 | 94 | 2 | 2.69 | |
Ramesh Mendis | 34.2 | 8 | 70 | 6 | 2.05 | |
Praveen Jayawickrama | 25 | 4 | 59 | 2 | 2.36 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 8 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | run out () | 6 | 10 | 0 | 0 | 60.00 |
Pathum Nissanka | lbw b Roston Chase | 66 | 154 | 0 | 0 | 42.86 |
Oshada Fernando | run out () | 14 | 41 | 0 | 0 | 34.15 |
Charith Asalanka | c Nkrumah Bonner b Veerasammy Permaul | 19 | 55 | 0 | 0 | 34.55 |
Dhananjaya de Silva | not out | 155 | 262 | 0 | 0 | 59.16 |
Dinesh Chandimal | c & b Roston Chase | 2 | 12 | 0 | 0 | 16.67 |
Ramesh Mendis | c Kemar Roach b Kraig Brathwaite | 25 | 58 | 0 | 0 | 43.10 |
Suranga Lakmal | lbw b Veerasammy Permaul | 7 | 11 | 0 | 0 | 63.64 |
Angelo Mathews | c Jermaine Blackwood b Veerasammy Permaul | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Lasith Embuldeniya | b Jason Holder | 39 | 124 | 0 | 0 | 31.45 |
Extras | 11 (b 4 , lb 4 , nb 2, w 1, pen 0) |
Total | 345/9 (121.4 Overs, RR: 2.84) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Veerasammy Permaul | 40 | 4 | 106 | 3 | 2.65 | |
Roston Chase | 27 | 2 | 82 | 2 | 3.04 | |
Jomel Warrican | 29 | 5 | 76 | 0 | 2.62 | |
Kemar Roach | 8 | 0 | 27 | 0 | 3.38 | |
Jason Holder | 9.4 | 1 | 26 | 0 | 2.77 | |
Kraig Brathwaite | 5 | 0 | 11 | 1 | 2.20 | |
Nkrumah Bonner | 3 | 1 | 9 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | lbw b Ramesh Mendis | 6 | 21 | 0 | 0 | 28.57 |
Jermaine Blackwood | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 36 | 92 | 0 | 0 | 39.13 |
Nkrumah Bonner | b Lasith Embuldeniya | 44 | 143 | 0 | 0 | 30.77 |
Shai Hope | c Suranga Lakmal b Ramesh Mendis | 16 | 24 | 0 | 0 | 66.67 |
Roston Chase | c Avishka Fernando b Ramesh Mendis | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kyle Mayers | c Dhananjaya de Silva b Ramesh Mendis | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Jason Holder | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 3 | 12 | 0 | 0 | 25.00 |
Joshua Da Silva | not out | 4 | 15 | 0 | 0 | 26.67 |
Kemar Roach | lbw b Lasith Embuldeniya | 13 | 17 | 0 | 0 | 76.47 |
Veerasammy Permaul | lbw b Ramesh Mendis | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Jomel Warrican | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 4 , lb 2 , nb 0, w 0, pen 0) |
Total | 132/10 (56.1 Overs, RR: 2.35) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Embuldeniya | 20.1 | 6 | 35 | 5 | 1.74 | |
Ramesh Mendis | 25 | 6 | 66 | 5 | 2.64 | |
Praveen Jayawickrama | 10 | 3 | 23 | 0 | 2.30 | |
Charith Asalanka | 1 | 0 | 2 | 0 | 2.00 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<