சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலை செய்துள்ளது.
கடந்த வியழக்கிழமை (16) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் இங்கிலாந்து வீரர்களை முதலில் துடுப்பாடுமாறு பணித்தார்.
T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு
கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழுமையாக குறைவடையாததனை அடுத்து, சர்வதேச கிரிக்கெட்…
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்க, இங்கிலாந்து அணியினர் தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்து அணித்தலைவர் ஜோ ரூட்டுடன் ஸ்டுவர்ட் ப்ரோட், சேம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்களை உள்வாங்கியிருந்தனர்.
தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் 162 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 469 ஓட்டங்கள் பெற்று தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடைநிறுத்தினர்.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்துடன் பென் ஸ்டோக்ஸ் 17 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 176 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில், தனது இரண்டாவது டெஸ்ட் சதத்துடன் டொம் சிப்லி 120 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம், இந்த இரண்டு வீரர்களும் இங்கிலாந்து அணியின் நான்காவது விக்கெட்டுக்காக 260 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் 287 ஓட்டங்களை எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கிரைக் ப்ராத்வைட் தான் தொடரில் பெற்ற இரண்டாவது அரைச்சதத்துடன் 75 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதேவேளை, ஷாமர் புரூக்ஸ் 68 ஓட்டங்களைப் பெற்றும், ரொஸ்டன் சேஸ் 51 ஓட்டங்களைப் பெற்றும் அரைச்சதங்களைப் பதிவு செய்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்ற, சேம் கரன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
நான்கு மாதங்களின் பின் பயிற்சிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்
நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்த..
தொடர்ந்து, 182 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, போட்டியின் ஐந்தாம் நாளின் தொடக்கத்தில் 129 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.
இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஆரம்பவீரராக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் பெற்று இம்முறையும் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 312 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த, மேற்கிந்திய தீவுகள் அணி 198 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஷாமர் புரூக்ஸ் 62 ஓட்டங்கள் எடுத்தும், ஜெர்மைன் பிளாக்வூட் 55 ஓட்டங்கள் எடுத்தும் அரைச்சதங்கள் விளாசிய போதும் அவை வீணாகியது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஸ்டுவார்ட் ப்ரோட் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், கிறிஸ் வோக்ஸ், டொமினிக் பெஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
நியூவ் சௌத் வேல்ஸின் உதவி பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க
அவுஸ்திரேலியாவின் நியூவ் சௌத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக…
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தெரிவாகினார். இப்போட்டியின் வெற்றி மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இங்கிலாந்து அணி 40 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) இதே மன்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 469/9 (162) – பென் ஸ்டோக்ஸ் 176, டொம் சிப்லி 120, ஜோஸ் பட்லர் 40, ரொஸ்டன் சேஸ் 172/5, கேமர் ரோச் 58/2
மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 287 (99) – கிரைக் ப்ராத்வைட் 75, ஷாமர் புரூக்ஸ் 68, ரொஸ்டன் சேஸ் 51, கிறிஸ் வோக்ஸ் 42/3, ஸ்டுவர்ட் ப்ரோட் 66/3
இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 129/3 (19) – பென் ஸ்டோக்ஸ் 78*, கேமர் ரோச் 37/2
மேற்கிந்திய தீவுகள் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 198 (70.1) – ஷாமர் புரூக்ஸ் 62, ஜெர்மைன் பிளாக்வூட் 55, ஸ்டுவர்ட் ப்ரோட் 42/3, பென் ஸ்டோக்ஸ் 30/2, கிறிஸ் வோக்ஸ் 34/2, டொமினிக் பேஸ் 59/2
முடிவு – இங்கிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க