இந்தியாவை எதிர்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

292
Image courtesy - GettyImages

மேற்கிந்திய தீவுகளுக்கு நீண்ட கால விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டி20 நிறைவுற்று தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 

ஒருநாள் தொடரின் பின்னர் இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் இம்மாத ஆரம்பத்தில் ஆஷஸ் தொடருடன் ஆரம்பமாகியது. அதன்படி இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள குறித்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு தொடராக நடைபெறவுள்ளது.

மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது டெஸ்டுக்கான…….

குறித்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் குழாம் சுற்றுத்தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னதாகவே டி20 மற்றும் ஒருநாள் குழாம் ஆகியவற்றுடன் சேர்த்து வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஒவ்வொரு தொடர்களுக்கும் தனித்தனியாக குழாம்களை வெளியிட்டு வந்தது.

அந்த அடிப்படையில் தற்போது அடுத்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள குழாமில் அடிப்படையில், 1993 ஆம் ஆண்டு பிறந்த 26 வயதுடைய சகலதுறை வீரரான ரஹ்கீம் கார்ன்வால் முதல் முறையாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமாகும் அடிப்படையில் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் தர அறிமுகத்தை பெற்றுக்கொண்ட ரஹ்கீம் கார்ன்வால் 5 வருடங்களின் பின்னர் தனது 26 ஆவது வயதில் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற இந்திய A மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரஹ்கீம் கார்ன்வால் சிறந்த முதல் தர பெறுபேற்றை கொண்டுள்ளார். 55 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சகலதுறை வீரராக துடுப்பாட்டத்தில் 2,224 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 260 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் A அணியின் தலைவர் ஷமர் ப்ரூக்ஸ் முதல் முறையாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமாகும் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும் இறுதியாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தவறவிடப்பட்ட அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் வேகப்பந்தவீச்சாளர் கிமோ போல் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

மாலிங்க பாணியில் பந்துவீசும் நுவன் துஷார இலங்கை வளர்ந்து வரும் அணியில்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிகளுக்கு……

இறுதியாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் உபாதை காரணமாக இந்திய அணியுடன் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். மேலும் முதல் தர போட்டியில் கலக்கியதன் காரணமாக இந்திய அணியுடனான டெஸ்டில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளரான ஜொமெல் வரிக்கன் உபாதை காரணமாக டெஸ்ட் குழாமில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் 13 பேர் கொண்ட டெஸ்ட் குழாம்

ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), க்ரேக் ப்ரெத்வெயிட், டெரென் ப்ராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜோம் கெம்பல், ரொஸ்டன் சேஸ், ரஹ்கீம் கார்ன்வால், ஷேன் டௌரிச், ஷெனன் கேப்ரில், சிம்ரொன் ஹெட்மெயர், ஷை ஹோப், கிமோ போல், கிமா ரோச்

டெஸ்ட் தொடர் அட்டவணை

  • 22 – 26 ஆகஸ்ட் – முதலாவது டெஸ்ட் போட்டி – அண்டிகா
  • 30 ஆகஸ்ட் – 3 செப்டம்பர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜமேக்கா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<