இங்கிலாந்துடன் மோதும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

281
Photo - AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட், ஒரு நாள், T20 என மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் மோதவுள்ளது.

BPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு சிறைத் தண்டனை

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரில், நேற்று (15) சில்ஹெட் ….

இங்கிலாந்து அணியின் இந்த மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் நேற்று (15) வெளியிடப்பட்டுள்ளது.  

வெளியிடப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் ஜமெய்க்காவினை சேர்ந்த துடுப்பாட்ட வீரர் ஜோன் கெம்பல் மற்றும் பார்படோஸினை சேர்ந்த சமார் ப்ரூக்ஸ் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக தம்முடைய கன்னி டெஸ்ட் போட்டியில் ஆட காத்திருக்கின்றனர்.

இதேநேரம், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை டர்ரன் ப்ராவோ மற்றும் அல்ஷாரி ஜோசெப் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.  

இதில் வேகப்பந்து வீச்சாளரான அல்ஷாரி ஜொசேப் அணிக்குள் உள்ளடக்கப்பட்ட போதிலும் காயம் ஒன்றில் இருந்து பூரணமாக குணமாடையாது இருப்பதால், அவர் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாது போகும் ஒரு சந்தர்ப்பம் காணப்படுகின்றது. அப்படியான ஒரு நிலை உருவாகும் பட்சத்தில் அவரின் இடத்தினை 22 வயதேயான வேகப்பந்து வீச்சாளர் ஓசானே தோமஸ் நிரப்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டெஸ்ட் வீரர்களின் தரப்படுத்தலில் பாக். தென்னாபிரிக்க வீரர்களுக்கு முன்னேற்றம்

நிறைவடைந்த தென்னாபிரிக்க பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் ….

அதேவேளை, துடுப்பாட்ட வீரரான டர்ரன் ப்ராவோ 2016ஆம் ஆண்டிற்கு பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் மூலமே மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கடந்த ஆண்டு காயம் காரணமாக பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்காத மேற்கிந்திய தீவுகளின் தலைவர் ஜேசன் ஹோல்டர் அணிக்கு திரும்பியுள்ளதுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் தரப்பினை வழிநடாத்தும் பொறுப்பினையும் எடுத்திருக்கின்றார்.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாம் பற்றி கருத்து தெரிவித்திருந்த அவ்வணியின் சிரேஷ்ட தேர்வாளர் கோர்ட்னி ப்ரவுன், ” ப்ராவோவின் வருகையோடு துடுப்பாட்டத்துறைக்கு பலம் சேர்ந்திருக்கின்றது. இதேவேளை, காயம் காணரமாக இல்லாமல் போயிருந்த அல்ஷாரி ஜோசேப்பும் அணிக்கு திரும்பியிருக்கின்றார். அதோடு, கடந்த மூன்று ஆண்டுகளிலும் முதல்தரப் போட்டிகளில் உறுதியான ஆட்டத்தினை காட்டிய சாமார் ப்ரூக்ஸும் இணைக்கப்பட்டுள்ளார். ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிட்கொயின் விளம்பரம்

கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகின்ற ஒவ்வொரு அணிகள் …

கடந்த 50 ஆண்டுகளில் ஒரு தடவை மாத்திரமே மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி, அண்மைக்காலங்களில் உலகின் மிகவும் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக மாறியிருப்பதால் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறப் போகும் டெஸ்ட் போட்டிகளில் அவ்வணி அபாரமாக செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

மறுமுனையில் தம்முடைய வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு கடைசி விருந்தினர்களாக வந்திருந்த பங்களாதேஷ் அணியினரை டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை பலத்த சவால் ஒன்றை இங்கிலாந்து அணிக்கு தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி மாதம் 23ஆம் திகதி பார்படோஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), கிரைக் ப்ரத்வைட், டர்ரன் ப்ராவோ, சாமார் ப்ரூக்ஸ்,  ஜோன் கெம்பல், ரொஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச், ஷன்னோன் கேப்ரியல், சிம்ரோன் ஹெட்மேயர், ஷாய் ஹோப், அல்ஷாரி ஜோசேப், கேமர் ரோச், ஜொமேல் வொர்ரிகன், ஒசானே தோமஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<