ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான குழாத்தினை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் மற்றும் T20I அணிகளுக்கான புதிய தலைவராக கீரன் பொல்லார்ட் செயற்படவுள்ளதுடன், டெஸ்ட் அணியின் தலைவராக ஜேசன் ஹோல்டர் தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
சர்ச்சைக்குறிய பௌண்டரி விதிமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பல…
T20I மற்றும் ஒருநாள் அணியை பொருத்தவரை, இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக்கில் (CPL) அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களான முறையே பிரெண்டன் கிங் (496 ஓட்டங்கள்) மற்றும் ஹெய்டன் வோல்ஸ் ஜேர் (22 விக்கெட்டுகள்) ஆகியோர் இரண்டு குழாத்திலும் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர CPL போட்டிகளில் பிரகாசித்த ரொமேரியோ செபர்ட் ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.
ஹெய்டன் வோல்ஸ் ஜேர் அமெரிக்க அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ளார். அதேநேரம், இந்திய அணிக்கு எதிரான T20I தொடருக்கான தலைவராக செயற்பட்டிருந்த கார்லோஸ் ப்ரத்வைட், CPL தொடரில் பிரகாசிக்க தவறிய காரணத்தால், ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவருடன், தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத கிரிஸ் கெயில், சுனில் நரைன் மற்றும் என்ரே ரசல் ஆகியோரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்படவில்லை.
டெஸ்ட் குழாத்தை பொருத்தவரை, உபாதைக்குள்ளாகியுள்ள செனொன் கேப்ரியலுக்கு பதிலாக, CPL தொடரில் பிரகாசித்திருந்த வேகப் பந்துவீச்சாளர் அல்ஷாரி ஜோசப் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவருடன், உபாதையிலிருந்து மீண்டுள்ள ஷேன் டவ்ரிச் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால், விக்கெட் காப்பாளர் ஜெமர் ஹெமில்டன் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி முக்கிய நீக்கமாக, இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஓட்டங்களை குவிக்க தவறிய டெரன் பிராவோ, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் உள்ள டெராடுனில் நடைபெறவுள்ளது. முதலில் T20I போட்டிகள் 5ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், மூன்று ஒருநாள் போட்டிகள் 13ஆம், 16ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இறுதியாக, ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் T20I குழாம்
கீரன் பொல்லாரட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன், எவின் லிவிஸ், பிரெண்டன் கிங், ஷிம்ரொன் ஹெட்மையர், செர்பென் ரதபோர்ட், ஜேசன் ஹோல்டர், பெபியன் எலன், ஹெய்டன் வோல்ஸ் ஜே.ஆர்., கெரி பீரி, செல்டன் கொட்ரெல், தினேஷ் ராம்தீன், கெஸ்ரிக்ஸ் வில்லியம்ஸ், அல்ஷாரி ஜோசப்
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம்
கீரன் பொல்லாரட் (தலைவர்), ஷேய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மையர், சுனில் எம்ரிஸ், நிக்கோலஸ் பூரன், பிரெண்டன் கிங், ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹொல்டர், ஹெய்டன் வோல்ஸ் ஜே.ஆர்., கெரி பீரி, ஷெல்டன் கொட்ரல், கீமோ போல், ரொமேரியோ செபர்ட், அல்ஷாரி ஜோசப்
மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம்
ஜேசன் ஹோல்டர் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரைக் ப்ராத்வைட், ஷிம்ரொன் ஹெட்மையர், செமர் ப்ரூக்ஸ், ரொஸ்டன் சேஸ், சுனில் எம்ரிஸ், ஜோமல் வொரிகன், ரகீம் கொர்வெல், கெமார் ரோச், கீமோ போல், அல்ஷாரி ஜோசப்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<