தென்னாபிரிக்க தொடருக்கான மே.தீவுகள் ஒருநாள், T20i குழாம்கள் அறிவிப்பு

West Indies tour of South Africa 2023

278
West Indies ODI and T20I squads for South Africa series 2023

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒருநாள் தலைவராக ஷேய் ஹோப் மற்றும் T20i தலைவராக ரோவ்மன் பவெல் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் கீழ் புதிய குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

>> டேவிட் வோர்னரின் உடல்நிலை தொடர்பான அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அறிவித்துள்ள குழாத்தில் முக்கிய மாற்றமாக செனொன் கேப்ரியல் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். இவர் இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடியிருந்தார். இவருடன் ரொஸ்டன் சேஸ் ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

வேகப் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை ஜெய்டன் சீல்ஸ் உபாதையிலிருந்து குணமடைந்துவருவதுடன், எண்டர்சன் பிலிப்ஸ் உபாதையிலிருந்து குணமடைந்தாலும், போட்டிக்கான பூரண தகுதியை பெறவில்லை என மே.தீவுகள் அறிவித்துள்ளது. ஒபெட் மெக்கோய் T20i குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும், வைத்திய ஆலோசனையின் அடிப்படையிலேயே போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும், T20i குழாத்தில் ஒரு மாற்றத்தை மாத்திரம் மேற்கொண்டுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லிவிஸிற்கு பதிலாக சகலதுறை வீரர் ரொமாரியோ ஷெபர்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் தலைவர் நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ், அல்ஷாரி ஜோசப் மற்றும் ஜொன்சன் சார்ல்ஸ் போன்ற அனுபவ வீரர்கள் தென்னாபிரிக்க தொடருக்கான குழாத்தில் தங்களுடைய வாய்ப்புகளை தக்கவைத்துள்ளனர்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மார்ச் 16 முதல் 21ஆம் திகதிகள் வரை நடைபெறவுள்ளதுடன், T20i தொடர் மார்ச் 25 முதல் 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே.தீவுகள் ஒருநாள் குழாம்

ஷேய் ஹோப் (தலைவர்), ரோவ்மன் பவெல், ஷமார் புரூக்ஸ், யானிக் கரியாஹ், கீசி கார்டி, ரொஸ்டன் சேஸ், செனொன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொஸைன், அல்ஷாரி ஜோசப், பிரெண்டன் கிங், கெயல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெபர்ட், ஓடியன் ஸ்மித்

மே.தீவுகள் T20i குழாம்

ரோவ்மன் பவெல் (தலைவர்), கெயல் மேயர்ஸ், ஷமார் புரூக்ஸ், யனிக் கரியாஹ், ஜொன்சன் சார்ல்ஸ், ஷெல்டொன் கொட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொஸைன், அல்ஷாரி ஜோசப், பிரெண்டன் கிங், ஒபெட் மெகோய், நிக்கோலஸ் பூரன், ரெய்மன் ரீபர், ரொமாரியோ ஷெபர்ட், ஓடியன் ஸ்மித்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<