மீண்டும் கோஹ்லி அசத்த ஒருநாள் தொடர் இந்தியா வசம்

283
cricket
©Cricinfo

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லுயிஸ் விதிப்படி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. 

புதிய பந்துவீச்சுப் பாணியை நான் மிகவும் விரும்புகிறேன் – அகில தனன்ஜய

எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து …..

நேற்று (14) நடைபெற்ற இப்போடியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லுவிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்திய பந்து வீச்சாளர்களை திணறடிக்கச் செய்தது. இருவரும் இணைந்து முதல் 10 ஓவர்களில் 114 ஓட்டங்களைக் குவித்தனர். எனினும், அடுத்தடுத்து இரு ஓவர்களில் அவர்கள் இருவரையும் ஆட்டம் இழக்கச் செய்து போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இந்திய அணி

போட்டியில் 22 ஓவர்கள் வீசப்பட்ட பின் மழை குறுகிட்டு நீண்ட நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது அணிக்கு 35 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆட்டம் மாற்றப்பட்டிருந்தது.  

ஆரம்ப விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிரடி இணைப்பாட்ட உதவியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி தமது இன்னிங்ஸிற்காக 35 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கெய்ல் 72 மற்றும் லுவிஸ் 43 ஓட்டங்கள் பெற்று தமது பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர். பந்துவீச்சில் கலீல் அஹமட் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.    

டக்வேர்த் லுயிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 255 ஓட்டங்கள் என மாற்றப்பட்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணியின் முதலாவது விக்கெட்டாக ரோஹித் சர்மா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் கோஹ்லி மற்றும் தவான் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். இருவரும் இணைந்து 66 ஓட்டங்கள் பகிர்ந்திருந்த போது தவான் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரிஷாஃப் பண்ட் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க, இந்திய அணி 92 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது

கோஹ்லியின் சாதனையுடன் இந்திய அணிக்கு வெற்றி

இந்திய அணியின் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ……..

இரண்டாவது போட்டியில் சத இணைப்பாட்டம் புரிந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோஹ்லி ஜோடி, இப்போட்டியிலும் நான்காவது விக்கெட்டுக்காக 120 ஓட்டங்களை பகிர்ந்ததன் மூலம் இந்திய அணியின் வெற்றி உறுதியாகியது. ஐயர் அதிரடியாக 65 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்திருந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 43ஆவது சதத்தை பூர்த்தி செய்திருந்தார்

இறுதியில் இந்திய அணி 32.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து  2-0 என தொடரை கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது

இரு அணிகளுக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட .சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதலாவது டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

போட்டியின் சுருக்கம். 

மேற்கிந்திய தீவுகள் அணி – 240/7 (35)- கெய்ல் 72, லுயிஸ் 43, புராண் 30, கலீல் அஹமட் 68/3, மொஹமட் ஷமி 50/2

இந்திய அணி – 256/4 (32.3) – கோஹ்லி 114*, ஐயர் 65, தவாண் 36, அல்லென் 40/2

முடிவு : இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<