சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று (22) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் அவ்வணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய இருவகையான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதுகிறது.
வனிந்து ஹசரங்கவின் அபாரத்தால் இலங்கைக்கு த்ரில் வெற்றி
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய
சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்று (22) நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி இறுதி நேரத்தில் ஐந்து பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அந்த வகையில் குறித்த போட்டியில் கிரண் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இரண்டாவதாக களத்தடுப்பில் ஈடுபட்டது. இறுதி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற குறித்த போட்டியில் இரண்டாவதாக பந்துவீசிய மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீசுவதற்கு சற்று தாமதமாகியது.
ஒருநாள் சர்வதேச போட்டி என்ற அடிப்படையில் 50 ஓவர்களையும் வீசுவதற்கு ஒரு அணிக்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினால் 2 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்தது.
இலங்கையுடனான டி20 சர்வதேச குழாமுக்கு திரும்பிய அண்ட்ரூ ரசல்
இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 14 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் தேர்வுக்குழு
இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 49.1 ஓவர்களையே வீசியிருந்தது. காரணம் இலங்கை அணி குறிப்பிட்ட அந்த ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை அடைந்தது. இந்த நேரத்திற்குள்ளேயே மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஓவர்களை குறைவாக வீசியிருந்தது.
இது ஒரு சர்வதேச போட்டி என்ற அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறை இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள், வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி குறித்த 2 ஓவர்களையும் குறைவாக வீசியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அணித்தலைவர் உள்ளிட்ட போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து ஒரு ஓவருக்கு 20 சதவீதம் என்ற அடிப்படையில் 2 ஓவர்களுக்கு மொத்தமாக 40 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான போல் வில்சன் (ஆஸி.), ருச்சிர பல்லியகுருகே (இலங்கை), மூன்றாம் நடுவர் மராயிஸ் எரஸ்மஸ் (தென்னாபிரிக்கா) மற்றும் நான்காம் நடுவர் லைன்டென் ஹனிபல் (இலங்கை) ஆகியோர் உறுதிப்படுத்த, போட்டியின் மத்தியஸ்தரான ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா) மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி முடிவடைந்ததன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவவர் கிரண் பொல்லார்ட் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் மேற்கிந்திய தீவுகள் அணி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை (26) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க