ஐ.பி.எல். நட்சத்திரங்களின்றி முக்கோண ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் மேற்கிந்திய தீவுகள்

465
Getty Images

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக அயர்லாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கே விளையாடவிருக்கும் முக்கோண ஒரு நாள் தொடருக்கான, 14 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் ஒரு நாள் குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பமாகும் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடும் இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கெடுக்கின்றன.

வீர விளையாட்டின் பின் மீண்டும் மும்பை அணியில் இணையும் மாலிங்க

இலங்கையில் நடைபெற்ற சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில்…..

எனினும், இந்த முக்கோண ஒரு நாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ஜொலித்து வரும் வீரர்களான அன்ரூ ரசல், கிறிஸ் கெயில், சிம்ரோன் ஹெட்மேயர் மற்றும் அல்ஷாரி ஜோசேப் ஆகியோர் இடம்பெறவில்லை.

இதன்படி மிக முக்கியமான மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் உள்ளடக்கப்படாத போதிலும், இது உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தினை பிரதிபலிக்கும் அணி கிடையாது என, மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்காலிக பயிற்சியாளரான ப்ளோய்ட் ரேபர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் வழமை போன்று சகலதுறை வீரரான ஜேசன் ஹோல்டரினால் வழிநடாத்தப்பட டர்ரன் ப்ராவோ, ஷாய் ஹோப், ரொஸ்டன் சேஸ் மற்றும் ஷேன் டொவ்ரிச் ஆகிய  துடுப்பாட்ட வீரர்களும் இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளனர்.

இதேநேரம் கடைசியாக 2017 ஆம் ஆண்டிலேயே ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளரான ஷனோன் கேப்ரியலிற்கும் இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அதோடு, 2017 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய மற்றுமொரு வீரரான ஜொனதன் கார்டரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் ஷன்னோன் கேப்ரியல் உடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சுத்துறையினை கேமர் ரோச் வலுப்படுத்துகின்றார்.

அதேவேளை, ஒரு நாள் போட்டிகளில் அறிமுகத்தினை பெற்றிராத சகலதுறை வீரர், ரெய்மன் ரெய்பேரிற்கும் அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர்களோடு இளம் வீரர்களான ஜோன் கெம்பல், பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோரும் முக்கோண ஒரு நாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியினை பலப்படுத்தவுள்ளனர்.

இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் போட்டிகள் யாவும் மே மாதம் 05ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 17ஆம் திகதி வரை அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தலைமை கிடைக்காவிட்டால் உலகக் கிண்ணத்திற்கு முன் ஓய்வுபெற தயாராகும் மாலிங்க

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில் அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து…..

மேற்கிந்திய தீவுகள் குழாம் – ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), ஜோன் கெம்பல், டர்ரன் ப்ராவோ, ஷாய் ஹோப், செல்டன் கோட்ரல், ஷன்னோன் கேப்ரியல், கேமர் ரோச், சுனில் அம்ப்ரிஸ், ரெய்மன்ட் ரேபர், பாபியன் அலன், ஏஷ்லி நேர்ஸ், ரொஸ்டன் சேஸ், சேன் டோவ்ரிச், ஜொனதன் கார்டர்

முக்கோண ஒரு நாள் தொடர் அட்டவணை

  • மே மாதம் 05ஆம் திகதி – அயர்லாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • மே மாதம் 07ஆம் திகதி – பங்களாதேஷ் எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • மே மாதம் 09ஆம் திகதி – அயர்லாந்து எதிர் பங்களாதேஷ்
  • மே மாதம் 11ஆம் திகதி – அயர்லாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • மே மாதம் 13ஆம் திகதி – மேற்கிந்திய தீவுகள் எதிர் பங்களாதேஷ்
  • மே மாதம் 15ஆம் திகதி – அயர்லாந்து எதிர் பங்களாதேஷ்
  • மே மாதம் 17ஆம் திகதி – இறுதிப் போட்டி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<