ஏபி.டி.வில்லியர்ஸாக சில நிமிடங்கள் மாறிய ரஷீத் கானின் அதிரடி துடுப்பாட்டம், திணறவைக்கும் துல்லியமான லெக் ஸ்பின், கூக்ளி பந்து வீச்சுடன் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுக்கள், இரண்டு அபாரமான பிடியெடுப்புகள், ஒரு ரன்-அவுட் ஆகியவை சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறும் அல்-ஜெசீரா
இரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட அல்-ஜெசிரா செய்திச் சேவையின் ஆவணப் படம் ஒன்று காலி சர்வதேச……….
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு கௌரவத்தையும், புகழையும் பெற்றுக்கொடுக்கின்ற வீரராக ரஷீத் கான் விளங்குகிறார்.
19 வயதுடைய இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், டி-20 போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதோடு, ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றார். எனவே, உலகின் பல்வேறு பாகங்களிலும் நடைபெற்று வருகின்ற, டி-20 லீக் தொடர்களில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு வீரராகவும் அவர் இருக்கின்றார்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் கான், அவ்வணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் என்பதையும் நிரூபித்துள்ளார்.
இம்முறை ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் நுழையும் இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்காக நேற்றுமுன்தினம் (25) நடைபெற்ற இரண்டாவது தெரிவுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன்ரைசஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணி வீரர் ரஷீத் கான் முக்கிய காரணமாக விளங்கினார். லீக் ஆட்டங்கள் அனைத்திலும் துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சன்ரைசஸ் வீரர்கள் தீர்மானமிக்க இந்தப் போட்டியில் சொதப்பிவிட்டனர். எனினும், இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், 10 பந்துகளில் 34 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்து சன்ரைசஸ் அணிக்கு கௌரவமான இலக்கொன்றைப் பெற்றுக்கொடுத்தார்.
கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து…..
துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் அசத்திய அவர் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள், இரண்டு பிடியெடுப்புகள் மற்றும் ஒரு ரன்–அவுட் என சகலதுறையிலும் பிரகாசித்து அவ்வணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கியமான காரணமாக இருந்ததுடன், குறித்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இதேவேளை, போட்டியின் பிறகு பேசிய அவர், “இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என சகலதுறையிலும் எனது திறமையை வெளிக்காட்டினேன். அத்துடன், இந்த விருதை எனது நாட்டில் எனது சொந்த ஊரில் உள்ள மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷீத் கானுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பலர் இந்திய அரசாங்கத்திடம் ரஷீத் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும், ரஷீத் கான் சிறந்தவர், ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தற்போது டுவிட்டரில் வைரலாகப் பரவி வருகின்றது.
லெக்-ஸ்பின் பிரச்சினைக்கு தீர்வு தருவாரா ஹதுருசிங்க?
இலங்கையர்களாகி நாம் லெக்-ஸ்பின் (Leg-spin) பந்து வீச்சை சரியாகக் கையாளத் தவறியுள்ளோம். லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை…….
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதற்கு பதிலளிக்கையில், குடியுரிமை வழங்குவது போன்ற விடயங்களை உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்யவேண்டும் என தெரிவித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த விவகாரம் ஆப்கானிஸ்தானிலும் எதிரொலித்தது. இந்நிலையில் ரஷீத் கான் குறித்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது டுவிட்டர் பதிவில், ரஷீத் கான் எங்கள் நாட்டின் தேசிய சொத்து. ஆப்கானியர்கள் ரஷீத் கானின் திறமை தொடர்பில் பெருமை கொள்கிறார்கள். எங்கள் வீரர்களை தங்கள் திறமையை காட்ட ஒரு தளத்தை வழங்கிய இந்திய நண்பர்களுக்கு நன்றி கூறுகிறேன். ரஷீத் கான் கிரிக்கெட் உலகிற்கு ஒரு சொத்தாகவே இருக்கிறார். நாங்கள் அவரை விட்டு கொடுக்க விரும்பவில்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.
Afghans take absolute pride in our hero, Rashid Khan. I am also thankful to our Indian friends for giving our players a platform to show their skills. Rashid reminds us whats best about Afg. He remains an asset to the cricketing world. No we are not giving him away. @narendramodi
— Ashraf Ghani (@ashrafghani) May 25, 2018
எது எவ்வாறாயினும், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ரஷீத் கானின் பந்துவீச்சு சிம்மசொப்பனமாக இருக்கும். வலிமையான துடுப்பாட்ட வீரர்கள் ரஷீத் கானிடம் வீழ்வது உறுதி.
கோஹ்லியின் ஓய்வினால் இந்திய அணியின் தலைவராக ரஹானே
ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்த பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்களில்……
அதுமாத்திரமின்றி, அடுத்த மாதம் இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் ரஷீத் கான் இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்கும் அவரின் லெக்ஸ்பின் பெரும் இடைஞ்சலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதேவேளை, இப்போட்டியில் அபார விளையாடி சன்ரைசஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்த ரஷீத் கானுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் தமது டுவிட்டர் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவற்றில் ஒரு சிலவற்றை கீழே பார்க்கலாம்.
Always felt @rashidkhan_19 was a good spinner but now I wouldn’t hesitate in saying he is the best spinner in the world in this format. Mind you, he’s got some batting skills as well. Great guy.
— Sachin Tendulkar (@sachin_rt) May 25, 2018
Always felt @rashidkhan_19 was a good spinner but now I wouldn’t hesitate in saying he is the best spinner in the world in this format. Mind you, he’s got some batting skills as well. Great guy.
— Sachin Tendulkar (@sachin_rt) May 25, 2018
Always felt @rashidkhan_19 was a good spinner but now I wouldn’t hesitate in saying he is the best spinner in the world in this format. Mind you, he’s got some batting skills as well. Great guy.
— Sachin Tendulkar (@sachin_rt) May 25, 2018
Cometh the hour, cometh the man. Big game, and @rashidkhan_19 was simply outstanding with both bat and ball. Has been a wonderful journey for us on our way to the finals and I wish the boys give it their everything and enjoy the finals. #KKRVSRH
— VVS Laxman (@VVSLaxman281) May 25, 2018
Special performance from @rashidkhan_19 tonight, big game player! #superstar #SRH
— Tom Moody (@TomMoodyCricket) May 25, 2018
When I say Rashid u say Khan . What a performance my brother @rashidkhan_19
— Carlos Brathwaite (@TridentSportsX) May 25, 2018
.@rashidkhan_19 you beauty! What a key role this man played today with the ball, the bat & on the field ! It’s gonna be Orange vs Yellow in the finale! @SunRisers #SRHvKKR #IPL2018
— R P Singh (@rpsingh) May 25, 2018
This was @rashidkhan_19 ‘s day and when it is the day of a top player, his team invariably wins. Congratulations @SunRisers . The two top teams meet in the final on Sunday, must be a fascinating contest #KKRVSRH
— Mohammad Kaif (@MohammadKaif) May 25, 2018
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<