பங்களாதேஷ் தொடரில் குடும்பமாக விளையாடினோம் – சந்திமால்

1529

பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்த டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர்களை கைப்பற்றியதற்கான முக்கிய காரணம் அணியொன்றாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டமையே என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

[rev_slider LOLC]

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான T-20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று(18) சில்லெட் நகரில் நடைபெற்று முடிந்தது. இப் போட்டியில் அபாரமாக ஆடிய இலங்கை அணி 75 ஓட்டங்களால் இலகுவான வெற்றியைப் பதிவுசெய்து தொடரையும் கைப்பற்றியது.

பங்களாதேஷுடனான T20 தொடரும் இலங்கை வசம்

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்திருக்கும், T-20 தொடரின் …..

2015 உலகக் கிண்ண போட்டிகளுக்குப் பிறகு தொடர் தோல்விகள், வீரர்களின் தொடர் உபாதைகள் உள்ளிட்ட பலவித நெருக்கடிகளுக்கு இலங்கை அணி முகங்கொடுத்திருந்தது. இவ்வாறான சூழ்நிலையில், இலங்கைக் கிரிக்கெட் அணியின் கடைசி நம்பிக்கையாக சந்திக்க ஹத்துருசிங்க புதிய பயிற்றுவிப்பாளராக இவ்வருடம் முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிலும் குறிப்பாக இலங்கை வீரர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களது நம்பிக்கையை உயர்த்திய சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை அணியின் 2018ஆம் ஆண்டை பிரகாசமாக்கியுள்ளார் என்று சொல்ல முடியும்.

கடந்த வருடத்தில் 29 ஒரு நாள் போட்டிகளில் 23 தோல்விகளையும், 8 T-20 போட்டிகளில் தொடர் தோல்விகளையும் சந்தித்த இலங்கை அணி, ஒட்டுமொத்தமாக 40 சர்வதேச போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களை கைப்பற்றிய முதல் அணியாக தற்பொழுது இலங்கை மாறியுள்ளது.

முன்னதாக முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்த இலங்கை அணி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து முத்தரப்பு ஒரு நாள் தொடரையும், அதன் பிறகு நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இவையனைத்துக்கும் அணியில் இடம்பெற்ற சகல வீரர்களினதும் பங்களிப்பு கிடைக்கப் பெற்றதுடன், மறுபுறத்தில் அணித் தலைவராக தினேஷ் சந்திமாலின் அதிஷ்டமும் கைகொடுத்திருந்தது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி, 2 …..

”பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர்களை கைப்பற்றியதற்கான முக்கிய காரணம் அணியொன்றாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டமையே ஆகும்.

நாம் மிகவும் மோசமான காலப்பகுதியினை கடந்து விட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக இந்த வெற்றிகள் அனைத்தும் அணியொன்றாக நாம் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஒரு குடும்பமாக விளையாடியதன் காரணமாகவே இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது” என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியும், அதன் முகாமைத்துவமும் தொடர் தோல்விகளினால் பெருமளவான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தன. இதற்கான தீர்வையும் அவர்கள் எதிர்பார்த்து வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த சந்திமால்,

”கடந்த காலங்களில் முகங்கொடுக்க நேரிட்ட தொடர் தோல்விகளால் மனதளவில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்த இலங்கை அணி வீரர்களுக்கு பங்களாதேஷ் தொடர் வெற்றியானது எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமையும். நாம் நீண்ட நாட்களாக இவ்வாறானதொரு அணியொன்றைத் தான் எதிர்பார்த்திருந்தோம். சிரேஷ்ட வீரர்களைப் போல இளம் வீரர்களும் அணியில் இடம்பெற வேண்டும். எனவே தற்போது அவ்வாறான அணியொன்று எம்மிடம் உள்ளது என நான் நம்புகிறேன்.

எனவே, எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள போட்டித் தொடர்களுக்கு இளம் வீரர்களுடனான அனுபவம் வாய்ந்த அணியொன்று எம்மிடம் உள்ளது. இதனால் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக நாம் தற்போது தயாராகி விட்டோம்“ என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இப்போட்டித் தொடரில் குசல் மெண்டிஸ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கியது தொடர்பில் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”குசல் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த போது ஒருசில டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியிருந்தார். ஆனால் அப்போது அவரால் மிகப் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போனது. அதனைத்தொடர்ந்து 3ஆவது மற்றும் 4ஆவது இலக்க வீரராகக் களமிறங்கியிருந்தார். எனவே குசலுக்கு அதிகளவு நேரம் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க தீர்மானித்து, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவது தொடர்பில் கலந்தாலோசித்தோம்.

உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக குறிப்பிட்டபோது, அன்ட்ரூ பிளிண்டொப் …..

எனவே தற்போது குசல் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி தனது பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். அதுமாத்திரமின்றி குசல் மெண்டிஸ், வலதுகை துடுப்பாட்ட வீரராக இருப்பதால் இடதுகை துடுப்பாட்ட வீரருடன் களமிறங்குவதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன், இந்த ஒன்றிணைப்பானது அணிக்கும் மிகப் பெரிய பலத்தை கொடுக்கும் என நம்புகிறேன். ஆகையால் தற்போது அணியில் உள்ள வீரர்களும் தமது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி மிகப் பெரிய போட்டியை கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போட்டியைத் தான் நாம் எதிர்பார்த்தோம். இது இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு சிறந்த அறிகுறியாகவும் அமைந்துள்ளது” என்றார்.

இதேவேளை போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவாகிய குசல் மெண்டிஸ் போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில், ஒரு நாள் தொடரில் என்னாால் 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் நான் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை முன்னெடுத்தேன். அதிலும் எனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு பயிற்சியாளர் கேட்டுக் கொண்டார். எனவே எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் எனது திறமையை வெளிப்படுத்தினேன் என்றார்.

இந்நிலையில், குசல் ஜனித் பெரேரா மீண்டும் அணிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்ட போது, குசல் ஜனித் பெரேரா அணிக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என கூறமுடியாது. ஆனால் அவருடைய மீள்வருகை அணிக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஆடிய தமிழ் பேசும் வீரர் பிரதீப்

வேகப்பந்து வீச்சாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், தற்போதைய போட்டி நடுவராகவும் உள்ள …..