கத்துக்குட்டி அணியாக சம்பியன்ஸ் கிண்ணத்தில் நுழைவது மகிழ்ச்சியே –மெதிவ்ஸ்

2463

அடுத்த வாரம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை ஒரு கத்துக்குட்டி அணியாக இருக்கப்போகின்றது என்கிற விதத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றார் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ்.

கடந்த 2002ஆம் ஆண்டு சம்பியன் கிண்ணத் தொடரில் இணை சம்பியனாகியிருந்த இலங்கை அணி, அதனை அடுத்து வந்த ஆண்டுகளில் (2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இறுதியாக இடம்பெற்ற) ஒரு தடவை மாத்திரம் சம்பியன்ஸ் கிண்ண தொடரின் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது.

ஒரு நாள் தரவரிசையில் இலங்கையை பின்தள்ளி 7ஆவது இடத்தை பிடித்த பங்களாதேஷ்

அயர்லாந்தின் டப்ளின் நகரில் இடம்பெற்ற போட்டியொன்றில் சர்வதேச ஒரு நாள் தரவரிசைப்..

இம்முறை, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காணப்படும் குழுவில் இலங்கை அணி மோதுகின்றது. இலங்கை அணியின் தலைவரான மெதிவ்ஸ் இம்முறை தனது அணி கிண்ணத்தினை வெல்லும் அணிகளில் ஒன்றாக அனைவரினாலும்  கருதப்படாததை ஏற்றிருப்பினும், தமது அணிக்கு கிண்ணத்தினை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருப்பதில் உறுதியாக இருப்பதாக தனது நம்பிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

அனைத்து அணிகளினையும் முழுமையாக எடுத்து பார்க்கும் போது, கடந்த மாதங்களில் நாங்கள் இங்கேயும், அங்கேயும் பல சிறு தோல்விகளையும் ஏமாற்றங்களையும் காண்பித்திருக்கின்றோம். உண்மையாக கூறப்போனால், யாருமே எமக்கு ஒரு வாய்ப்பினை தர இருக்கவில்லை.

இத்தொடரில் கத்துக்குட்டி அணிகளில் ஒன்று போல பிரவேசிக்கின்றோம். ஆனாலும் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஏனெனில், இலங்கையிலும் இங்கிலாந்திலும் கடந்த நாட்களில் இத்தொடரிற்காக கடும் முயற்சிகளையும், பிரயத்தனங்களையும் மேற்கொண்டு உழைத்திருக்கின்றோம். அது எமக்கு சிறப்பாக அமைந்திருந்தது. அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சிப் போட்டியில் நாம் நல்ல ஆட்டத்தினை காட்டி விளையாடவிருக்கின்றோம். அதன் மூலம் எமக்கு நல்லதொரு பயிற்சி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

அனைத்து அணிகளும் முழுமையாக காணப்பட்டிருப்பினும், போட்டியின் நாளில் குறைந்தளவான தவறுகளை காட்டும் அணியே வெற்றி பெறும். அது இங்கிலாந்தாகவும் இருக்கலாம், இல்லை இலங்கையாகவும் இருக்கலாம் அல்லது வேறொரு நாடாகவும் இருக்கலாம். அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. யாரும் ஒருவருடை நிலைமை இதுதான் என்பதை எழுதிக்காட்டிவிட முடியாது.  அடுத்து நடைபெற இருக்கும் தொடர் அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பும் பரபரப்பும் மிக்க தொடர் ஒன்றாக அமையும் என்பதிலும் நம்பிக்கையாக இருக்கின்றேன்.

என இலங்கை அணியின் தலைவர் மெதிவ்ஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.

29 வயதாகும் மெதிவ்ஸ், 2014ஆம் ஆண்டில் 3-2 என இங்கிலாந்தினை வீழ்த்தி சாதனை வெற்றி அடைந்த இலங்கை குழாத்தில் அங்கம் வகித்த வீரர்களில் ஒருவராக காணப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இத்தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை எடுத்துப் பார்க்கும் போது சற்று வித்தியாசமாக அமைகின்றது. இது பற்றி கருத்து தெரிவித்த மெதிவ்ஸ் தமது அணி பெற்றிருக்கும் அனுபவங்களினை தமக்கு சாதமாக உபயோகித்துக்கொள்வார்கள் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்

சந்தகனின் அபாரப் பந்துவீச்சால், ஸ்கொட்லாந்தை வீழ்த்திய இலங்கை

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து பயணித்திருக்கும்..

ஆரம்ப அனுபவங்களினை மாத்திரம் பிரயோகிக்க கூடிய அணிகளில் ஒன்றாகவே நாம் தற்போது இருக்கின்றோம். இங்கிலாந்தினை பொறுத்தவரை நாம் சிறந்ததொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தோம். முக்கியமாக, 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரினை குறிப்பிட முடியும். எனவே, நாங்கள் அதேபோன்று இம்முறையும் துளிர்விட்டு செயற்பட முயற்சிப்போம்.

எம்மிடம்  இளம் வீரர்களைக் கொண்ட அனுபவம் குறைந்த குழாம் காணப்படுகின்றது. சில வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றனர். ஆனால், இருக்கும் அனைவரும் போட்டியின் போக்கினை எத்தருணத்திலும் மாற்றும் ஆற்றல் மிக்கவர்கள். எம்மிடம் திறமை இருக்கின்றது. இனி அதனை வெளிப்படுத்தி எம்மை நிரூபிப்பது மாத்திரமே எஞ்சியிருக்கின்றது

என்று மெதிவ்ஸ் இலங்கை அணியின் துடுப்பாட்டம் பற்றி தெரிவித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை மீண்டும் பெற்றுக்கொண்டிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு இத்தொடரில் முக்கியமான ஒருவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தற்போது வரையில் முழுமையாக T--20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி வரும் மாலிங்க இத்தொடரினை முழு உடற்தகுதியோடு களம் காண இருப்பதாக மெதிவ்ஸ் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், 33 வயதாகும் வேகப்பந்து வீச்சாளரான அவர் இவ்வகையான நீண்ட ஓவர்கள் போட்டியிலும் தொடர்ந்து சாதிப்பார் என நம்பிக்கையினையும் வெளியிட்டிருந்தார்.

மாலிங்க முழு உடற்தகுதியுடன் காணப்படுகின்றார். அவரை வரும் போட்டிகளில் முழுமையாக உபயோகித்து செயற்படவிருக்கின்றோம். அவர் கடந்த காலங்களில் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடாது காணப்பட்டாலும் அநேகமான .பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினை வைத்திருப்பது எமக்கு மிகவும் உபயோகமானதாக காணப்படுகின்றது.

அதே போன்று, பயிற்சிகளிலும் அவர் சிறப்பாக செயற்படுகின்றார். அவரும் தொடரில் எம்மைப்போன்று சாதிப்பதில் நம்பிக்கை வைத்தவராகவே காணப்படுகின்றார். அவர் போட்டியின் வெற்றியாளராக அணியினை மாற்றும் திறமை கொண்டவர் என்பது எம் அனைவருக்கும் தெரியும்.

அதனை கடந்த வருடங்களில் நிரூபித்தும் இருக்கின்றார். தனியொருவராக இருந்து  போட்டியினை வெற்றியாக்கித்தரும் ஆற்றல் கொண்ட அவரின் விளையாட்டினை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

என மெதிவ்ஸ் மாலிங்கவின் மீள்வருகை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

முதல்தரப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் சங்கக்கார

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில்..

இலங்கை அணியானது சம்பியன்ஸ் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவுடன் மோதி தொடரை ஆரம்பிக்க முன்னர், சவால்மிக்க துணைக்கண்ட  இரண்டு நாடுகளுடன் பயிற்சிப் போட்டிகளில் மோதுகின்றது.

யாரும் எதிர்பாராத வகையில் ஸ்கொட்லாந்து அணியுடனான பயிற்சிப் போட்டியொன்றில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இரண்டு நாட்களின் பின்னர் சிறப்பாக செயற்பட்டு அடுத்த போட்டியில் வெற்றி அடைந்திருந்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் நிலைமைகளினை தமது அணி பொருந்திக் கொண்டதை ஏற்றுக்கொண்ட மெதிவ்ஸ், தாம் முழுமையாக போட்டிகளுக்கு தயாராக இருக்கின்றோம் என்பதை உறுதி செய்திருந்தார்.

ஸ்கொட்லாந்து அணியுடனான முதலாவது பயிற்சிப் போட்டியானது எமக்கு ஒரு பயிற்சிப் போட்டியாகவே அமைந்திருந்தது. அதில் சில வீரர்களுக்கு நாம் ஓய்வும் வழங்கியிருந்தோம். ஆனால் அப்போட்டியின் உண்மையான நிலைமைக்கு அமைவாக முதலில் நாம் பந்து வீச்சினையே தேர்வு செய்திருக்க வேண்டும்.

அதோடு, அவர்களை நாம் இரண்டாவது போட்டியில் வீழ்த்தியிருந்த போதிலும் எமக்கு போட்டியின் முடிவுகள் பற்றிய எந்த கவலையும் இருந்திருக்கவில்லை. நாம் இப்போட்டிகள் மூலம் இத்தொடரிற்கு பொருத்தமான நிலைகளை பொருந்திக் கொள்வதை மாத்திரமே (விக்கெட்டுக்களுக்காவும், வேகப்பந்து வீச்சுக்களை சரிவர உபயோகிப்பதற்காகவும், மத்திய வரிசையில் நேரம் செலவழிப்பதற்காகவுமே) எதிர்பார்த்திருந்தோம்

என மெத்திவ்ஸ் ஸ்கொட்லாந்து அணியுடனான தமது தோல்வி பற்றி குறிப்பிட்டிருந்தார்.