இவ்வார நிகழ்ச்சியில் பின்னிலையில் இருந்து வந்து அமோக வெற்றி பெற்ற நிகம்பு யூத் கழகம், சம்பியன்ஸ் லீக்கில் இன்னும் முதலாவது வெற்றிக்காக போராடும் சொலிட் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகங்கள், மாத்தறை சிடியின் தொடர் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுபர் சன் மற்றும் ஞானரூபன் வினோத்தின் கோல் மூலம் போட்டியை சமன் செய்த சென் மேரிஸ் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.