WATCH – Bhanuka Rajapaksa வுக்கு தொடரும் அநீதி | ஏன் இலங்கை அணியில் வாய்ப்பில்லை?

390

இந்திய அணிக்கெதிரான T20i தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பானுக ராஜபக்ஷ கடைசி நிமிடத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்களைப் போல பல கிரிக்கெட் விமர்சகர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். எனவே, பானுக ராஜபக்ஷ ஏன் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டார்? பானுகவின் அடுத்த தீர்மானம் என்னவாக இருக்கும்? உள்ளிட்ட விடயங்கள் பற்றி எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்கும் விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.