இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பு குழாம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து அனில் கும்ளே நீக்கப்பட்டதை தொடர்ந்து, டிரெவர் பெய்லி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார்.
>> ஓய்வை திரும்ப பெறுமாறு பென் ஸ்டோக்ஸுக்கு கோரிக்கை
இந்தநிலையில் டிரெவர் பெய்லியின் கீழ் செயற்படவுள்ள பயிற்றுவிப்பு குழாம் தொடர்பிலான அறிவிப்பே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக வசீம் ஜெப்பர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த இவர் கடந்த ஆண்டு பதவியிலிருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் இவர் அணியுடன் இணைந்துக்கொண்டுள்ளார்.
>> ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர்: அதிரடி மாற்றங்களுடன் இலங்கை அணி? | Sports RoundUp – Epi 225
இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் ஹெடின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சார்ல் லாங்கேவெல்ட் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு மயங்க் அகர்வால் தலைமையில் களமிறங்கிய போதும், இம்முறை அவரை அணியிலிருந்து விடுவித்துள்ளதுடன் சிக்கர் தவான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<