LPL தொடரில் வசீம் அக்ரம், சொஹைப் அக்தர், லாராவுக்கு முக்கிய பதவி

382
Wasim Akram, Shoaib Akhtar & Brian Lara

இலங்கை கிரிக்கெட் சபையினால் இவ்வருட இறுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆலோசகர்களாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான வசீம் அக்ரம் மற்றும் சொயிப் அக்தர் ஆகிய இருவரும் செயற்படுவார்கள் என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 20ஆம் திகதி வரை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை முதலில் அறிவித்தது

பிறகு கொவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் இருந்த சிக்கல்கள் காரணமாக போட்டியை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.

>> எல்.பி.எல். தொடரின் வீரர்கள் ஏலம் ஒக்டோபரில்

இதனிடையே, இப்போட்டித் தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் ஏலம் நிகழ்வு ஒக்டோபர் முதலாம் திகதி காணொளி வாயிலாக நடைபெறும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்க கிறிஸ் கெயில், டேரன் சமி, டேரன் பிராவோ, சஹீட் அப்ரிடி, சகிப் அல் ஹசன், ரவி பொபாரா, கொலின் மன்ரோ, வேர்ணன் பிளாண்டர் ஆகிய சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடவுள்ள அணிகளின் ஆலோசர்களாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான வசீம் அக்ரம் மற்றும் சொயிப் அக்தர் ஆகிய இருவரும் செயற்படுவார்கள் என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

>> Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் லங்கா ப்ரீமியர் லீக்கில் ஆலோசர்களாக இடம்பெறுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக்கில் இந்தியாவின் முன்னாள் வீரர்களான முனாஃப் பட்டேல், ப்ரவீன் குமார் உள்ளிட்ட நான்கு வீரர்கள் விளையாடுவார்கள் என போட்டிளை நடத்தும் IPG  நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

>> எல்.பி.எல். வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல் வெளியீடு

மறுபுறத்தில் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர்களான சஹீட் அப்ரிடி, மொஹமட் ஹபீஸ், சர்பராஸ் அஹமட் மற்றும் சொயிப் மலிக் உள்ளிட்ட 24 வீரர்கள் விளையாடுவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<