இலங்கை அணயின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ கௌண்டி கிரிக்கெட் தொடரில் வர்விக்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஷ்வ பெர்னாண்டோ எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வர்விக்ஷையர் அணியின் டிவிசன் 1 போட்டிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Embed link – https://www.thepapare.com/jasprit-bumrah-named-icc-mens-cricketer-of-the-year-tamil/
கடந்த ஆண்டு இவர் கௌண்டி கிரிக்கெட் தொடரில் யோர்க்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததோடு, 3 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
இவர் ஏப்ரல் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள கௌண்டி தொடரின் வரவிக்ஷையர் அணியின் முதல் போட்டியில் சசெக்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளார். அதே மாதத்தில் டர்ஹாம் மற்றும் நோட்டிங்கம்ஷையர் அணிக்கு எதிரான போட்டிகளிலும் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<