மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலிருந்து கைவிரலில் முறிவு காரணமாக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் விலகியுள்ளார்.
என்னை நினைத்து லாரா பதட்டமாக இருந்தார் – கெய்ல்
அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய 3 நாடுகள் பங்குபற்றும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் மேற்கிந்திய தீவுகளில்நடைபெற்று வருகிறது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் சதம் அடித்தார். அந்தப் போட்டியில் அவர் களத்தடுப்பு செய்து கொண்டிருக்கும் போது கை விரலில் காயம் ஏற்பட்டது.
எக்ஸ்ரே எடுத்த பார்க்கப்பட்டது. அப்போது அவரது இடது ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவரால் 2- 6 வார காலம் விளையாட முடியாது என்று வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இந்நிலையில் காயமடைந்துள்ள வோர்னர் ஓய்வு எடுத்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க குணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்