முத்தையா முரளிதரன் – ஷேன் வோர்ன் ஆகிய சுழல் ஜாம்பவான்களை கௌரவிக்கும் பதாதை ஒன்று காலி சர்வதேச மைதானத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>பதவியினை இராஜினமாச் செய்த ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரி
முரளிதரன் – வோர்ன் டெஸ்ட் போட்டி தற்போது காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்தப் போட்டிக்கு மத்தியிலேயே குறிப்பிட்ட நினைவுப்பதாதை வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களினதும் விளையாட்டிற்கு கௌரவம் வழங்கும் வகையில் குறிப்பிட்ட பதாதை வைக்கப்பட்டிருப்பதோடு, இந்த நினைவுப்பதாதையில் கிரிக்கெட் இரசிகர்களின் கையொப்பங்களை இடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்தப் பதாதையில் முதலில் கையொப்பமிட்ட நபராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய போட்டி வர்ணனையாளருமான பர்வீஸ் மஹ்ரூப் மாறியமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் இந்த நினைவுப்பதாதை இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதோடு, இதில் கிரிக்கெட் இரசிகர்களுக்கு தொடர்ந்து தங்களது பங்களிப்பினை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.