பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தமது ஒருநாள், T20 அணிகளுக்கான புதிய தலைவராக இளம் துடுப்பாட்டவீரர் பாபர் அசாமினை நியமனம் செய்திருக்கின்றது.
கடந்த ஆண்டு, சர்ப்ராஸ் அஹமட் பாகிஸ்தான் அனைத்துவகைப் போட்டிகளுக்குமான அணித் தலைவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் பாபர் அசாம் பாகிஸ்தானின் T20 அணித் தலைவராகவும், அஷார் அலி டெஸ்ட் அணித்தலைவராகவும் நியமனம் பெற்றனர்.
பாகிஸ்தானின் புதிய ஒருநாள் அணித் தலைவராக பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, கடந்த வாரம் T20 அணித் தலைவரான பாபர் அசாமை பாகிஸ்தானின் ஒருநாள் அணித் தலைவராகவும் நியமனம் செய்வதாக அறிவித்திருந்ததோடு, அஷார் அலி டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை தொடர்ந்து வழிநடத்துவார் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கள் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், பாபர் அசாம் தனது புதிய அணித்தலைவர் பொறுப்பு பற்றி பேசிய போது பாகிஸ்தானுக்கு 1992இல் உலகக் கிண்ணம் வென்று கொடுத்த இம்ரான் கான் போல், தனது தரப்பை வழிநடாத்த விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
”நான் 19 வயதுக்குட்பட்ட அணியினையும், T20 அணியினையும் வழிநடாத்தியிருக்கின்றேன். அணித்தலைவராக இருக்கும் உங்களுக்கு, சாந்தமான மனநிலை ஒன்று வேண்டும். ஏனெனில், நீங்கள் ஒரு அணியினை அழைத்துச் செல்ல வேண்டி இருக்கின்றது. நீங்கள் எதிரணி பற்றிய திட்டங்களை வெளிக்கொண்டு வருவதில் முறையாக செயற்பட வேண்டும்.”
பந்துகளில் எச்சிலிடுவதை தடைசெய்ய தயாராகும் ஐசிசி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ளேவின் தலைமையிலான ஐசிசி
”உங்களுக்கு உங்களை சிறிது கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும். உங்களுக்கு உள்ளுக்குள் கோபம் வரும் போது அதனை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இதனை 19 வயதுக்குட்பட்ட அணியில் இருந்த போது கற்றுக் கொண்டேன். மைதானம் என்று வரும்போது ஏனைய வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக உங்களது ஆக்ரோசத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களது வீரர்களுக்கு நீங்கள் 110 சதவீத ஆதரவினை வழங்கும் போது அவர்கள் சரியாகச் செயற்படுவார்கள்். நான் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு அணித்தலைவராக இருக்க விரும்புகின்றேன். நான் இம்ரான் கானின் வழிமுறையை பின்பற்ற விரும்புகின்றேன்.”
பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி. அண்மையில் வெளியிட்ட ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் ஆறாம் இடத்தில் காணப்படுவதோடு, T20 அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து தற்போது நான்காம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் அணியின் தரவரிசைகள் பற்றி கருத்து வெளியிட்ட பாபர் அசாம் தனது தரப்பினை தரவரிசைகளில் முன்னேற்றும் முனைப்புடன் காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.
”வெவ்வேறு வகைப் போட்டிகளில் எமது தரநிலையை நோக்கும் போது எனக்கு அது ஏற்கக் கூடியதாக இல்லை. எனது பொறுப்பு (பாகிஸ்தான்) அணியினை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டுவருவதாகும். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் நான் இந்த (அணித்தலைவர்) பொறுப்புக்கு தயாராக இருக்கின்றேன் என நினைத்திருக்கின்றது. நான் தயாராக இருக்கின்றேன்.”
கிரிக்கெட் உலகில் இருக்கின்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருக்கும் பாபர் அசாம் T20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதோடு, ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்திலும், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஐந்தாம் இடத்திலும் காணப்படுகின்றார். இவ்வாறான நிலையில், புதிய அணித்தலைவர் பொறுப்பு பாபர் அசாமின் துடுப்பாட்டத்திற்கு அழுத்தம் கொடுக்குமா? என்றும் அவரிடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு அவர் அது அழுத்தம் தராது என பதிலளித்திருந்தார்.
”நான் மாற்றங்களை விரும்புபவன். தலைமைப் பொறுப்பும் துடுப்பாட்டமும் வெவ்வேறானவை. நீங்கள் துடுப்பாடும் போது நீங்கள் துடுப்பாட்டத்தில் மாத்திரமே கவனம் செலுத்த வேண்டும். தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்தக்கூடாது. துடுப்பாட்டம் முடிந்த பின்னரே, அணியின் ஆட்டம் குறித்து எண்ண வேண்டும். எனது இலக்கு அணித்தலைவர் ஆன போதும் ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதாகும்.” என்றார்.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க