இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய சகலதுறை வீரர்களில் ஒருவராக உருவெடுக்கும் வனிந்து ஹஸரங்க, 2021ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் மீள ஆரம்பிக்கப்படும் போது அதில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
>> இரண்டாவது T20I போட்டியின் வெற்றி தொடர்பில் கூறும் தனன்ஜய
கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்றிருந்த, 13ஆவது பருவகாலத்திற்கான IPL தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த IPL தொடரில் விளையாடும் அணிகள் சில உபாதைக்குள்ளான தமது வீரர்களை வெளிநாட்டு வீரர்களுடன் பிரதியீடு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
>> Video – எதிரணிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் ஹசரங்க, சாமிக்க!
அதன்படி T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கும் இலங்கையின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்கவை, உபாதைக்குள்ளான IPL அணிகள் தமக்காக பெற்றுக்கொள்ள போராடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், IPL தொடரில் ஆடும் 4 அணிகள் வனிந்து ஹஸரங்கவினை கொள்வனவு செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், இலங்கை அணியின் சுழல் ஜாம்பவானான முத்தையா முரளிதரனும் அண்மைக்காலமாக T20 போட்டிகளில் ஜொலித்து வரும் வனிந்து ஹஸரங்கவை IPL அணிகள் தமக்காக விளையாட அழைக்க வேண்டும் என ஆலோசனை ஒன்றினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் T20 தொடரில் தற்போது பங்கேற்று வரும் வனிந்து ஹஸரங்க, அதில் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக தனது திறமையினை வெளிப்படுத்தி வருகின்றமை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<