T20I தரவரிசையில் முதலிடம் பிடித்த வனிந்து ஹஸரங்க!

ICC Men’s T20 Rankings

178

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க முதலிடம் பிடித்துள்ளார். 

ஐசிசி T20 உலகக்கிண்ணம் நெருங்கிவரும் நிலையில்,  228 மதிப்பீட்டு புள்ளிகளை பெற்று பங்களாதேஷின் சகீப் அல் ஹஸனுடன் முதலிடத்தை வனிந்து ஹஸரங்க பகிர்ந்துக்கொண்டுள்ளார். 

கோல் மார்வல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷின் அனுபவ சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் விளையாடாத காரணத்தால், அவருடைய மதிப்பீட்டு புள்ளிகள் குறைவடைந்துள்ளன. இதன் காரணமாக ஹஸரங்க மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். 

அதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் நபி சகலதுறை வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும், ஜிம்பாப்வே அணியின் சிக்கண்டர் ரஷா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்இதில் தென்னாபிரிக்காவின் எய்டன் மர்க்ரம் மற்றும் அவுஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோர் ஒரு இடம் பின்தள்ளி 5 மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் வனிந்து ஹஸரங்கவை தொடர்ந்து இலங்கை அணியின் தசுன் ஷானக 18வது இடத்தை பிடித்துள்ளார். 

சர்வதேச T20I தரவரிசையின் துடுப்பாட்ட வரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஆதில் ரஷீட் ஆகியோர் முதலிடங்களை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<