இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹஸரங்க நேற்றைய தினம் (14) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது, உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்.
>> அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் இருவருக்கு உபாதை
தொடையின் மேல் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தன்னுடைய பந்துவீச்சை நிறைவுசெய்துக்கொண்டு, வனிந்து ஹஸரங்க மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். இதன்போது போட்டியில் 4 விக்கெட்டுகளையும் இவர் வீழ்த்தியிருந்தார்.
இந்தநிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் வனிந்து ஹஸரங்கவின் தொடைப்பகுதியில் சிறிய உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் வனிந்து ஹஸரங்க உபாதையிலிருந்து குணமடைந்துவிடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளைய தினம் (16) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<