இலங்கை T20 அணியின் தலைவராக செயற்பட்டு வந்த வனிந்து ஹஸரங்க தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மிகவும் குறுகிய காலப்பகுதியில் இலங்கை T20 அணியினை தலைவராக வழிநடாத்திய வனிந்து ஹஸரங்க அண்மையில் நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையின் மோசமான அடைவுகளை அடுத்து தனது தலைவர் பதவியினை இராஜினமா செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>இலங்கை – இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!
வனிந்து ஹஸரங்க தனது பதவியினை இராஜினமா செய்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையின் வாயிலாக ஊர்ஜிதம் செய்திருக்கின்றது.
அத்துடன் தான் பதவியினை இராஜினமா செய்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வனிந்து ஹஸரங்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
”இலங்கைக்கு ஒரு வீரராக எனது அர்ப்பணிப்பு எப்போதும் இருக்கும் என்பதோடு, நான் அணிக்கும் அணியின் தலைமைத்துவத்திற்கும் எப்போதும் ஆதரவினை வழங்குவேன்”
வனிந்து ஹஸரங்க பதவி விலகியிருக்கும் நிலையில், இலங்கை அடுத்ததாக இந்திய அணியுடன் விளையாடவிருக்கும் T20 தொடரில் இலங்கை புதிய தலைவர் ஒருவரினை காலக்கிரமத்தில் நியமனம் செய்யும் என குறிப்பிடப்படுகின்றது.