CPL தொடரிலிருந்து விலகும் வனிந்து ஹசரங்க

Caribbean Premier League 2021

765

மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL), இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் செப்டம்பர் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் ஓக்டோபர் மாதம் ஐசிசி T20I உலகக் கிண்ணத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. எனவே, தேசிய அணியின் தயார்படுத்தல்களை கருத்திற்கொண்டு CPL தொடருக்கு வனிந்து ஹசரங்க செல்லமாட்டார் என எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து!

கடந்த மே மாதம் நடைபெற்ற வீரர்கள் தெரிவில் வனிந்து ஹசரங்க, CPL அணியான சென். கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிக்காக தெரிவுசெய்யப்பட்டார். இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் சபை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடருக்கான போட்டி அட்டவணையை  உறுதிசெய்துள்ளது. எனவே, வனிந்து ஹசரங்க CPL தொடரில் பங்கேற்க முடியாது என அணி நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் CPL தொடரில் விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திசர பெரேரா பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிக்காகவும் இசுரு உதான ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்காகவும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<