நியூசிலாந்துக்கு எதிரான T20I தொடரில் உபாதைக்குள்ளாகிய வனிந்து ஹஸரங்க, இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> இலங்கையுடனான ஒருநாள் தொடரிலிருந்து லொக்கி பெர்குஸன் விலகல்
நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரினை அடுத்து இரண்டு அணிகளும் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நாளை (13) தம்புள்ளையில் ஆரம்பமாகுகின்றது.
விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே வனிந்து ஹஸரங்கவின் உபாதை அவரினை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கெடுக்காமல் மாற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வனிந்து ஹஸரங்கவின் உபாதை தொடர்பில் இன்னும் பூரணமாக உறுதிப்படுத்தாத போதிலும் அவரின் பிரதியீடாக இலங்கை ஒருநாள் அணியில் துஷான் ஹேமன்த பெரும்பாலும் இணைவார் என நம்பப்படுகின்றது.
இலங்கை அணிக்காக ஏற்கனவே 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள துஷான் ஹேமன்த அண்மையில் நிறைவுக்கு வந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை A அணிக்காக மிகச் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<