இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டி இன்று (15) கெனபராவில் நடைபெறவுள்ள நிலையில், வனிந்து ஹஸரங்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
>> பினுரவுக்கு கொரோனா; இலங்கை அணியில் இணைந்தார் குசல் மெண்டிஸ்
எனவே, இன்று நடைபெறவுள்ள போட்டி மற்றும் அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் வனிந்து ஹஸரங்கவுக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்றைய போட்டியில் இவர் விளையாடமாட்டார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சே இன்றைய போட்டியில் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியா தொடருக்காக சென்றிருந்து துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸிற்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், அவர் குணமடைந்து அணியில் மீண்டும் இணைந்துக்கொண்டுள்ளார். எனினும், வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோருக்கு தற்போது கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<