வனிந்து ஹஸரங்க புதிய சாதனை

321

வருடம் ஒன்றில் சர்வதேச T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இலங்கையின் வனிந்து ஹஸரங்க, புதிய சாதனையினைப் படைத்திருக்கின்றார்.

>>வனிந்துவின் போராட்டம் வீணாக இங்கிலாந்திடம் வீழ்ந்த இலங்கை!

நேற்று திங்கட்கிழமை (01) இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ண மோதலில் மொத்தமாக மூன்று விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த வனிந்து ஹஸரங்க, இந்த ஆண்டில் மொத்தம் 34 விக்கெட்டுக்களை கைப்பற்றி வருடம் ஒன்றில் அதிக T20i விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளரான அன்ட்ரூ டை, 31 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி வருடம் ஒன்றில் T20i போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளரான தப்ரைஸ் சம்ஷி, இந்த ஆண்டு T20i போட்டிகளில் 32 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<