சபரகமுவ மாகாணத்தின் எல்லை ஓரத்தில் அமைந்திருக்கும் உடவளவை ஒரு தேசிய பூங்காவாகும். அது உடவளவை நீர்த்தேக்க கட்டுமானத்தில் இருந்து இடம்பெயர்ந்த விலங்குகளுக்கு தனி இடத்தை வழங்குவதாக இருந்தது.
உடவளவை தேசிய பூங்கா இலங்கை நீர்ப் பறவைகள் மற்றும் யானைகளில் முக்கியமாக ஒரு வாழ்விடமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த தேசிய பூங்கா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினரின் பிரபல சுற்றுலாத் தலமாக மாறியிருப்பதோடு, இது நாட்டில் மூன்றாவது அதிகம் கவர்ந்த தேசிய பூங்காவாகவும் உள்ளது.
The Race Show; Walawa Supercross 2017
Walawa supercross, the annual motor racing event organised by the Sri Lanka …
உடவளவை தேசிய பூங்காவில் இருந்து சில கிலோ மீற்றர்களுக்கு அப்பால் எதிர்வரும் மே 13 ஆம் திகதி இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரவியல் பொறியில் படையணி மற்றும் இலங்கை மோட்டார் சைக்கிள் கழகத்தின் (SLMCC) ஏற்பாட்டில் ‘வளவ சுப்பர் க்ரொஸ் 2018′ மோட்டார் பந்தயம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.
நாட்டின் சிறந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் கார் ஓட்ட வீரர்கள், ஒருவருக்கு ஒருவர் போட்டியிடும் வளவ சுப்பர் க்ரொஸ் போட்டிகள் தொடர்ச்சியாக 6ஆவது ஆண்டாகவே இம்முறை நடைபெறவுள்ளது. தற்போதைய மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் நலன்புரி படையணி மற்றும் SLAEME இன் உயிர்நீத்த வீரர்கள் குடும்பங்களின் நன்மைக்காகவே இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
செவனகலை கிறாப்ட்ஸ்மன் ஒட்டோ ட்ரோம் பந்தயப் பாதையில் 11 கார் பந்தயங்கள் மற்றும் 13 மோட்டார் சைக்கிள் இறுதி போட்டிகள் என 145க்கும் அதிகமான வீரர்கள் போட்டியிடுவதை காண முடியுமாக இருக்கும். இந்த நிகழ்வு மே 13 ஆம் திகதி நடைபெறவிருப்பதோடு நேர பந்தயங்கள் (Timing Race) மே 12 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
வளவ சுப்பர் க்ரொஸ் போட்டிகள் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களிடம் குறுகிய காலத்திலேயே அதிக பிரபலம் அடைந்துள்ளது. இந்த போட்டியில் மோட்டார் பந்தயத்தில் இலங்கையில் அதிகம் அறியப்பட்ட பெயர்கள் அதிக பரபரப்பான போட்டிகளில் பங்கேற்பது ரசிகர்களுக்கு உற்சாகம் தருவாக அமைந்துள்ளது.
நான்கு வெவ்வேறு பந்தயங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய இளம் வீரரான எவோன் குருசிங்க, வளவ சுப்பர் க்ரொஸ் போட்டியின் சிறந்த மோட்டார் சைக்கிள் வீரராக தெரிவாகி இருந்தார். குருசிங்க கடந்த பருவத்தில் சிறந்த மோட்டார் சைக்கிள் வீரர்களில் ஒருவராக இருந்ததோடு அவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த ”பொக்ஸில் சுப்பர் க்ரொஸ்” போட்டியில் ஏற்பட்ட அபாயகரமான விபத்தொன்றுக்கு முகம்கொடுத்ததால் இந்த ஆண்டு அவர் முக்கிய போட்டியாளராக பங்கேற்கவில்லை. தான் காயத்தில் இருந்து மீண்டு வருவது மற்றும் தனது வெற்றியின் ஆதரவாக இருந்தவர்கள் குறித்து வெற்றி வீரரான குருசிங்க ThePapare.com க்கு கருத்து வெளியிட்டார்.
Photos: Fox Hill Super Cross 2018 Day 2
ThePapare.com | Faisal Ramees | 22/04/2018 Editing and re-using images without …
கடந்த ஆண்டில் நாட்டின் மோட்டார் பந்தய வட்டத்தில் மண் தரை மற்றும் தார்பூசிய ஓடுதளம் இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய வீரராக அஷான் சில்வா இருந்தார் என்பது இரகசியமல்ல. 2017 வளவ சுப்பர் க்ரொஸில் சம்பியன் ஓட்டுநராக முடிசூடிய அஷான் சில்வா, ”செவனகலை கிறாப்ட்ஸ்மன் ஒட்டோ ட்ரோம்” பந்தயப் பாதையில் முகம்கொடுக்கும் சவால்கள் பற்றி தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.
இந்த ஆண்டில் 250cc 2T வரை Mx பந்தயத்தில் தற்போதைய தேசிய சம்பியன் இஷான் திசானாயக்க, அனுபவ வீரர் கயன்த் சதருவன், சமீர பரணவிதான ஆகியோர் எவோன் குருசிங்கவிடம் இருந்து பட்டத்தை பறிக்க போராடவிருக்கும் நிலையில் இந்த போட்டி உக்கிரமாக அமையவுள்ளது. 3500cc வரையான SLGT கார்கள் பந்தயத்தில் அஷான் சில்வா தனது கடும் போட்டியாளராக தோன்றியிருக்கும் குஷான் பீரிசுடன் தீவிர போட்டியில் ஈடுபடவுள்ளார்.
இலங்கையில் முதலிடத்தில் இருக்கும் விளையாட்டுத் தளமான ThePapare.com, இந்த போட்டிகளை நேரடியாகவும் முக்கிய செய்திகளாகவும் கொண்டுவரவிருப்பதோடு ThePapare.com இன் மோட்டார் பந்தயங்களுக்காக வழங்கப்படும் Raceshow நிகழ்ச்சியை உங்களுக்கு மைதானத்தில் இருந்து கண்டுகளிக்க முடியும்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…