ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் 2022 – 2ஆம் சுற்று வாக்கெடுப்பு ஆரம்பம்

2022 ThePapare Most Popular Schoolboy Cricketer

179

இலங்கையின் முதற்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இனால் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதுக்குரிய இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (02) காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, கடந்த 22ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு (இலங்கை நேரப்படி) ஆரம்பமாகிய முதல் சுற்று வாக்கெடுப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைந்தது.

2021/22 பருவகாலத்தில் இலங்கை பாடசாலை கிரிக்கெட்டில் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – I ஐச் சேர்ந்த 36 அணிகளை உள்ளடக்கியதாக விளையாடிய 108 வளர்ந்து வரும் வீரர்கள் இம்முறை வாக்கெடுப்பில் இடம்பெற்றனர். இதன்படி, முதல் சுற்று வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் 36 வீரர்கள் தற்போது இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

எனவே, இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு (SMS) வெள்ளிக்கிழமை (02) காலை 9.00 மணி முதல் செப்டம்பர் 16ஆம் திகதி மாலை 5.59 மணி வரை நடைபெற உள்ளது.

ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் 2022 – வாக்கெடுப்பு ஆரம்பம்

முதல் சுற்றில் காலி மஹிந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹிருண மந்திர அதிகூடிய வாக்குகளைப் பெற்று (9584 வாக்குகள்) இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டார். இது தவிர முதல் சுற்றில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் தரிந்து ஹர்ஷன மற்றும் இசிபதன கல்லூரியின் கெவின் சாமுவேல் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதின் முதலாவது அத்தியாயம் கடந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், கடந்த ஆண்டு விருதில் இரண்டாவது சுற்றில் பங்கேற்ற 36 வீரர்களுக்கும் 2,174,779 SMS வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

இதில் கொழும்பு றோயல் கல்லூரி வீரரும், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் சகலதுறை வீரருமான சதீஷ ராஜபக்ஷ, 1,034,559 SMS வாக்குகளைப் பெற்று 2021ஆம் ஆண்டிற்கான ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், குருநாகல் புனித ஆளாள் கல்லூரியின் சகலதுறை வீரரான திரிமல்ஷா சில்வா 631,804 SMS வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், கொழும்பு இசிபதன கல்லூரியின் தலைவராக இருந்த தெவிந்து டிக்வெல்ல 275,343 SMS வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இரண்டாவது சுற்றின் (SMS) நிபந்தனைகள்,

  1. முதல் சுற்று முடிவில் அதிக வாக்குகள் பெற்ற 36 வீரர்கள் இரண்டாவது சுற்றுக்கு போட்டியிடுவார்கள்.
  2. இரண்டாவது சுற்று SMS வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (02) காலை 9.00 மணி முதல் செப்டம்பர் 16ஆம் திகதி மாலை 5.59 மணி வரை நடைபெறும்.
  3. இங்கு அனைவருக்கும் தனித்தனி SMS குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.
  4. எந்தவொரு டயலொக் தொலைபேசி இலக்கத்தினூடாக மட்டுமே வாக்களிக்க முடியும்.
  5. ஒரு தொலைபேசி இலகத்தில் இருந்து ஒரு நாளைக்கு எத்தனை SMS வேண்டுமானாலும் அனுப்பலாம்.
  6. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் மூலம் வாக்களிக்க முடியாது.
  7. ஒரு வாக்கிற்கான SMS கட்டணமாக 5 ரூபாய் மற்றும் வரிகள் அறவிடப்படும்.
  8. முதல் கட்ட (இணைய) வாக்குகள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்கு செல்லுபடியாகாது.
  9. செப்டம்பர் 16ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு, அதிக எண்ணிக்கையிலான SMS களை பெற்றுக்கொண்ட வீரர் ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரராக தெரிவாகுவார்.
  10. ThePapare.com இன் முடிவே இறுதியானது.

முதல் சுற்றில் இருந்து இரண்டாவது சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் இரண்டாவது சுற்றில் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய முறை பின்வருமாறு:

Hiruna Mandila – Mahinda College Type HM<space>MCG & send to 6633
Tharindu Harshana – Thurstan College Type TH<space>TC & send to 6633
Kevin Samuel – Isipathana College Type KS<space>IC & send to 6633
Mithul Senarath – De Mazenod College Type MS<space>DMC & send to 6633
Shane Adithya – Maris Stella College Type SA<space>MSC & send to 6633
Ashen De Soyza – St. Benedict’s College Type AZ<space>SBC & send to 6633
Caniston Gunaratnam – S. Thomas’ College, Mt. Lavinia Type CG<space>STC & send to 6633
Hansaja Hiruna – Maris Stella College Type HH<space>MSC & send to 6633
Sachintha Dissanayake – Dharmaraja College Type SD<space>DCK & send to 6633
Kavishka Imesh – St. Sylvester’s College Type KI<space>SSCK & send to 6633
Pasan Suwahas – St. Benedict’s College Type PS<space>SBC & send to 6633
Kushan Herath – St. Sebastian’s College Type KH<space>SSC & send to 6633
Risitha Perera – St. Anne’s College Type RP<space>SAC & send to 6633
Raaed Rizwan – Zahira College Type RR<space>ZC & send to 6633
Dunith Wellalage – St. Joseph’s College Type DW<space>SJC & send to 6633
Jayamin Muthukumarana – Maliyadeva College Type JM<space>MCK & send to 6633
Mahith Perera – S. Thomas’ College, Mt. Lavinia Type MP<space>STC & send to 6633
Mahindu Malith – Maris Stella College Type MM<space>MSC & send to 6633
Hasitha Suranga – St. Aloysius College, Galle Type HS<space>SACG & send to 6633
Dasis Manchanayake – Royal College Type DM<space>RC & send to 6633
Shenith Fernando – St. Sebastian’s College Type SHF<space>SSC & send to 6633
Abdul Rahuman – St. Anthony’s College Wattala Type AR<space>SACW & send to 6633
Manaan Muzammil – St. Anne’s College Type MM<space>SAC & send to 6633
Sandeesh Fernando – St. Sebastian’s College Type SF<space>SSC & send to 6633
Navija De Seram – St. Thomas’ College, Matara Type NS<space>STCM & send to 6633
Anjala Bandara – Mahanama College Type AB<space>MC & send to 6633
Deneth Sithumina – Moratu Maha Vidyalaya Type DS<space>MMV & send to 6633
Charuka Herath – Maliyadeva College Type CH<space>MCK & send to 6633
Lahiru Abeysinghe – St. Anthony’s College, Kandy Type LA<space>SACK & send to 6633
Adithya Abeyawardana – St. Aloysius College, Galle Type AB<space>SACG & send to 6633
Devindu Kakirideniya – Mahanama College Type DK<space>MC & send to 6633
Koojana Perera – Mahanama College Type KP<space>MC & send to 6633
Amitha Perera – St. Anthony’s College Wattala Type AP<space>SACW & send to 6633
Dulara Bandulasena – Dharmaraja College Type DB<space>DCK & send to 6633
Vishwa Rajapaksha – St. Joseph Vaaz College Type VR<space>SJV & send to 6633
Abisheak Liyanaarachchi – D.S.Senanayake College Type AL<space>DSSC & send to 6633