IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக மீண்டும் VIVO நிறுவனம்

221
BCCI

ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) T20 தொடரின் பிரதான அனுசரணையாளராக இலத்திரினியல் தயாரிப்பு நிறுவனமான விவோ (VIVO) இணைந்திருக்கின்றது.

பல்வேறு காரணங்களால் 2021 IPL ஐ தவறவிட்ட வீரர்கள்

பல வருட ஒப்பந்த அடிப்படையில் IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக காணப்பட்ட விவோ நிறுவனம் கடந்த ஆண்டு, IPL தொடருக்கான தமது அனுசரணையினை நிறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த ஆண்டுக்கான IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக விளையாட்டுப் பொழுதுபோக்கு நிறுவனமான ட்ரீம்லெவன் செயற்பட்டிருந்தது. 

இதன் பின்னர் ஏற்கனவே செய்யப்பட்ட ஓப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக இந்த ஆண்டு (2021) தொடக்கம் விவோ நிறுவனமானது மாறியிருக்கின்றது. 

விவோ நிறுவனம் மீண்டும் IPL தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக மாறியிருக்கும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட, விவோ நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங், இளம் சந்ததியினர் விரும்பும் ஒரு தயாரிப்பு இந்தியா, இலங்கை என இரண்டு நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற IPL தொடருக்கு மீண்டும் அனுசரணை வழங்குவதில் மகிழ்ச்சிடையவதாக குறிப்பிட்டிருந்தார்.  

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு நியமனம்

ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை பிரதானமாக உற்பத்தி செய்யும் விவோ நிறுவனத்தின் தயாரிப்புக்கள் இலங்கையிலும் மிகப் பிரபல்யமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சீனாவினை அடிப்படையாக கொண்டு இயங்கும் விவோ நிறுவனத்தின் உற்பத்திகள் 40இற்கும் மேற்பட்ட நாடுகளில் உபயோகம் செய்யப்படுவதோடு, உலகம் முழுவதும் விவோ நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 400 மில்லியன் வரையிலான பயனாளர்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<