தமிழக வீரரின் சுழலில் சுருண்டது மாலிங்கவின் மும்பை : இறுதிப் போட்டியில் புனே

835

பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல்.தொடரின் தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளது.

.பி.எல். தொடரின் லீக் போட்டிகளின் நிறைவில் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தையும், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

பொன்டிங்கின் கனவு ஐ.பி.எல் அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக லசித் மாலிங்க

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின்..

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான தகுதிச் சுற்றின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரகானே, திரிபாதி ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கமே புனே அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் கடைசிப் பந்தில் திரிபாதி டக்அவுட் ஆனார். 2ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்மித் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து புனே தத்தளித்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு ரகானேயுடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டு, 80 ஓட்டங்களை சேர்த்தது. ரகானே 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து திவாரியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடினார். அதன் பின்னர் அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து அதிரடி காட்ட, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

டோனி 26 பந்துகளில் 5 சிக்சருடன் 40 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திவாரி 48 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 58 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் கடைசி பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  

இதனைத் தொடர்ந்து 163 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சிம்மன்ஸ்பார்த்திவ் படேல் ஆகியோர் முதலில் அதிரடி காட்டினர்.

இந்த ஜோடி 35 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில், ஆட்டத்தில் தாகூர் வீசிய நான்காவது ஓவரின் போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து, சிம்மன்ஸ் 5 (13) அரங்கு திரும்பினார்.

பஞ்சாப்பை பந்தாடி பிளேஓஃப் சுற்றுக்கு முன்னேறியது புனே

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின்..

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா 1 (2), ராயுடு 0 (3), பொல்லார்ட் 7 (10) ஆகிய மூன்று முக்கிய வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, போட்டியின் போக்கே மாறியது.   

அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா 14 (10) ஓட்டங்களும், குரூனல் பாண்டியா 15 (11) ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 52 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தாகூரின் பந்தில் கிறிஸ்டியனிடம் பிடிகொடுத்து வெளியேற, மும்பை அணியின் தோல்வி உறுதியானது

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதையடுத்து புனே அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.  

போட்டியின் சுருக்கம்

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 162/4(20) – ரஹானே 56(43), திவாரி 58(48), டோனி 40(26), மாலிங்க 14/1(3)

மும்பை இந்தியன்ஸ் 142/9(20) – பார்த்திவ் பட்டேல் 52(40), வாஷிங்டன் சுந்தர் 16/3(4)