அவுஸ்திரேலியாவில் காணப்படும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியின் அறையில் அத்துமீறி நுழைந்த நபருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஹோட்டல் நிருவாகம் குறிப்பிட்டுள்ளது.
>> கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கும் இலங்கை
தற்போது T20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் காணப்படும் விராட் கோலி, பேர்த் நகரில் நடைபெற்ற போட்டிக்காக சென்ற போது அங்கே அமைந்துள்ள Crown Resort ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் விராட் கோலி தங்கியிருந்த அறையினை நபர் ஒருவர் அத்துமீறி காணொளியாக (Video) பதிவு செய்ததுடன் அது சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு, பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் விசனம் தெரிவித்த விராட் கோலி, இவ்வாறான செயல்கள் தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது என தன்னுடைய உத்தியோகபூர்வ Instagram கணக்கில் தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும், Crown Resort ஹோட்டல் நிர்வாகம் இந்த விடயத்திற்காக மன்னிப்பு கோரி இருந்ததோடு, இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.
>> கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கும் இலங்கை
அதேநரேம் விராட் கோலியின் இரசிகர்கள் உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.
இதேநேரம் இந்திய அணி அடுத்ததாக பங்களாதேஷ் வீரர்களை T20 உலகக் கிண்ணத்தில் எதிர்கொள்ளவுள்ளதோடு, இரு அணிகளும் மோதும் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (02) எடிலைட் நகரில் ஆரம்பமாகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<