முதல் இரண்டு டெஸ்ட்களிலும் கோலிக்கு ஓய்வு

109

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>ஐசிசியின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த T20I அணியின் தலைவியாகிய சமரி அதபத்து

இந்தியா வரும் இங்கிலாந்து அணியானது அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 25ஆம் திகதி ஹைதராபாதில் ஆரம்பமாகவுள்ள நிலையில் விராட் கோலி சொந்த காரணங்கள் கருதி டெஸ்ட் தொடரின் முதல் போட்டிகள் இரண்டிலும் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடாத விடயம் தொடர்பில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் ரோஹிட் சர்மாவிடமும், அணி நிர்வாகத்திடமும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 1991 ஓட்டங்களை 42.36 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் குவித்திருக்கும் விராட் கோலி, ராஜ்கோட்டில் நடைபெறும் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேவேளை விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணிக்காக மற்றுமொரு வீரர் அவரின் இடத்தினை பிரதியீடு செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<