ஒரு வருடத்தில் இரு மடங்காக அதிகரித்த விராட் கோஹ்லியின் வருமானம்

393

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளை நிகழ்த்தி வருவதுடன், வருமானம் ஈட்டுவதிலும் இவ்வருடம் இரு மடங்கு முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்ற கௌதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு T20 ….

இந்தியாவில் இயங்கிவரும் பிரபலபோர்பஸ் இந்தியாஇணையத்தளம் 2017 செப்டம்பர் மாதம் 30ம் திகதி தொடக்கம், 2018ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், அதிக வருமானம் ஈட்டியுள்ள இந்திய பிரபலங்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 100 பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் பொலிவூட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தை பிடித்துள்ளார். எனினும், துரித வளர்ச்சியுடன் இரு மடங்கு வருமானத்தை ஈட்டியுள்ள இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோஹ்லி குறித்த கால இடைவெளிக்குள் இந்திய ரூபாயில் சுமார் 228.09 கோடியினை சம்பாதித்துள்ளார்.

இவ்வாறு, 228.09 கோடிகளை சம்பாதித்துள்ள விராட் கோஹ்லி, 2018ம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலில், தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக முதலிடத்தை தக்கவைத்துள்ளார். கடந்த வருடம் விராட் கோஹ்லி அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்கள் பட்டியலில் 100.72 கோடிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். இம்முறை இவர் ஒரு இடம் மாத்திரம் முன்னேறியுள்ள போதிலும், கடந்த வருடத்தை விட சுமார் 127 கோடிகளை அதிகமாக சம்பாதித்துள்ளமை முக்கிய விடயமாகும்.  

புதுப்பொழிவுடன் IPL தொடரில் களமிறங்கவுள்ள டெல்லி அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கடந்த…

விராட் கோஹ்லியின் இந்த வருமான அதிகரிப்பில், .பி.எல். (IPL) தொடருக்காக பெங்களூர் அணியால் வழங்கப்படும் ஊதியம் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் ஊதியத்தை விடவும், விளம்பரங்களின் மூலமாக பெறப்படும் வருமானம் அதிக செல்வாக்கினை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய விளையாட்டு வீரர்களின் அதிக வருமானம் ஈட்டும் பட்டியலில், கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி இரண்டாவது இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில், முக்கியமாக,, கடந்த வருடம் 3 கோடியை மாத்திரம் வருமானமாக பெற்றிருந்த சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா இம்முறை 28.46 கோடிகளை வருமானமாக ஈட்டி, இந்தப் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

2018 Forbes India Celebrity 100: The top sports stars who made it to the list | Forbes India

Multimedia 2018 Forbes India Celebrity ..