இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர், அதனது கட்டமைப்பு காரணமாக இதுவரையில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களை விட அதிகம் சவால் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தொட முடியாத உயரத்தில் மெக்ராத்: சாதிக்க காத்திருக்கும் மாலிங்க
உலகக் கிண்ண வரலாற்றை எடுத்துக் கொண்டால் துடுப்பாட்ட….
இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் பத்து நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கெடுக்கும் அணிகள் ஒவ்வொன்றும் லீக் முறையில் மொத்தமாக 9 போட்டிகளில் ஆடவிருக்கும் நிலையில், குறித்த போட்டிகளில் சிறப்பாக செயற்படும் நான்கு அணிகளுக்கே தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாக முடியுமான நிலை இருக்கின்றது.
“(இது) உண்மையில் மிகவும் சவாலான உலகக் கிண்ணமாகும், ஏனெனில் இதன் கட்டமைப்பு அவ்வாறு அமைந்திருக்கின்றது. அதோடு, நீங்கள் இதில் பங்கெடுக்கும் அணிகளை பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் சமபலத்தினை கொண்டிருக்கின்றன.” என விராட் கோலி குறிப்பிட்டிருந்தார்.
“ஆப்கானிஸ்தான் அணி கூட 2015ஆம் ஆண்டிலிருந்து நிறைய முன்னேற்றத்தினை காண்பித்திருக்கின்றது. எனவே, ஒவ்வொரு போட்டியிலும் நாம் எங்களது ஆளுமை அறிந்து சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும்.” என மேலும் பேசும் போது குறிப்பிட்ட கோலி, கடந்த கால உலகக் கிண்ணங்களில் பலம் குறைந்ததாக கருதப்பட்ட அணிகள் கூட இம்முறை உலகக் கிண்ணத்தில் நெருக்கடி தரக்கூடிய நிலைக்கு மாறியிருப்பதை விபரித்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் ஒருபுறமிருக்க, இந்திய அணி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் நான்கு போட்டிகளிலும் பலம்வாய்ந்த கிரிக்கெட் அணிகளான தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை எதிர்கொள்ளவிருக்கின்றது. இவ்வணிகளை எதிர்கொள்வது தொடர்பில் பேசிய கோலி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“நல்ல விடயம் என்னவெனில் (உலகக் கிண்ணத்தின்) ஒவ்வொரு போட்டிகளுக்குமிடையே போதுமான இடைவெளி ஒன்று காணப்படுகின்றது. இதனால் வீரர்கள் அதிக அழுத்தங்களுக்கு ஆளாக மாட்டார்கள். எப்போதும் எங்களை மீளமைத்து கொள்ள நேரமிருக்கும். எங்களுக்கு நான்கு கடினமான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட வேண்டி இருக்கின்றது. இது எமக்கு (உலகக் கிண்ணத்திற்கான) ஒரு இசைவாக்கத்தினை பெற உதவும். நாங்கள் செய்தது தான் சரியென எண்ண இங்கே இடம் கிடையாது. அதனாலேயே இது உலகக் கிண்ணமாக இருக்கின்றது. நீங்கள் போட்டி நடைபெறும் நாளில் தயாராக இருக்க வேண்டும். அதுதான் சவால்.”
ஸ்கொட்லாந்துக்கெதிரான போட்டியுடன் தன்னம்பிக்கை பெற்றுள்ள திமுத்
கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தமது சவால் நாடான பாகிஸ்தானிடம் தோல்வியினை தழுவியிருந்தது. எனினும், உலகக் கிண்ணத் தொடர் என்று வரும் போது ஒரு போட்டியில் கூட இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியினை தழுவியது இல்லை. எனவே, பாகிஸ்தானை இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் எதிர்கொள்ள கடந்த காலங்களில் செய்த தயார்படுத்தல்களையே இந்திய அணி பயன்படுத்தும் என விராட் கோலி கூறியிருந்தார்.
“நாம் தனித்தனியாக ஒவ்வொரு அணிக்கு எதிராக தயாராகுவோம் எனில், எமது பயணத்தில் எமக்கு கவனம் செலுத்த முடியாமல் ஆகிவிடும்.”
“தயார்படுத்தல்களில் எந்த மாற்றங்களுமின்றி, எதிரணியினையும் கருத்திற்கொள்ளாது எங்களது தரத்தினையும், வலிமையினையும் காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.”
இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கிண்ணத் தொடரினை எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி செளத்தம்ப்டன் நகரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஆரம்பமாகும் போட்டியுடன் ஆரம்பம் செய்கின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<