இன்று உலகில் இருக்கும் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? இந்தக் கேள்விக்கு பல பதில்கள் இருக்கக் கூடும் என்றாலும் அதில் முக்கியமான பதில்களில் ஒன்றாக விராத் கோஹ்லியின் பெயர் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஓட்டங்கள் பெறும் வேகத்தில் அவரது புகழும் அதிகரித்து வருகிறது.
2019 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே உலகில் இதுவரை எந்த ஒரு வீரரும் படைத்திராத சாதனை ஒன்றை நிலைநாட்ட கோஹ்லியால் முடிந்தது அவரது புகழை உலகுக்கே பறைசாற்றுவதாக அமைந்தது. வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலினால் வழங்கப்படுகின்ற மூன்று பிரதான விருதுகளையும் தனதாக்குவதற்கு கோஹ்லியால் முடிந்தது. அது ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் என்ற மூன்று விருதுகளையும் அள்ளினார்.
டி20 அரங்கில் டில்சானின் சாதனையை முறியடித்த கோஹ்லி
இருதரப்பு தொடருக்காக ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய……
தற்போது 30 வயதான கோஹ்லி உலகெங்கும் பெற்றிருக்கும் புகழ் உச்சத்தில் உள்ளது. இந்த ஆண்டின் ESPN World Fame 100 தரப்படுத்தலில் 7 ஆவது இடத்தை பெற்றுக்கொள்வதற்கு கோஹ்லியால் முடிந்தது. அந்த பட்டியலில் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் எட்டாவது இடத்திலும், கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் பத்தாவது இடத்திலும், லுவிஸ் ஹமில்டன் 21வது இடத்திலும் உள்ளனர். உலகின் பிரபலமான விளையாட்டாக இருக்கும் கால்பந்து வீரர்களுக்கு சவாலாக மாறுவதற்கு கோஹ்லியால் முடிந்துள்ளது. அவரது இன்ஸ்டாகிராமை பின்பற்றுவோர் எண்ணிக்கை 107 மில்லியனை தாண்டியுள்ளது.
விராட் கோஹ்லி கால்பந்து ரசிகர் என்பது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 205 போட்டிகளில் 10000 ஒருநாள் ஓட்டங்களை கடந்திருக்கும் கோஹ்லி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன்னர் கால்பந்து ஆர்வம் மற்றும் உலகக் கிண்ணத்தின் நினைவுகளை FIFA.com உடன் பகிர்ந்து கொண்டார்.
நீங்கள் கால்பந்து ஆடத் தொடங்கியது எத்தனை வயதில்? எவ்வளவு காலம் விளையாடினீர்கள்?
நான் நான்காறு வயதில் இருந்து கால்பந்து ஆடுகிறேன். பந்தை காலல் உதைத்தபடி அங்குமிங்கும் ஓடுவது சாதாரணமான ஒன்று. என்றாலும் அது எனக்கு பெரும் களிப்பை தந்தது. எனது விருப்பம் மற்றும் ஈடுபாடு இருந்தது கிரிக்கெட்டில் தான். என்றாலும் நான் முடியுமான எல்லா நேரங்களிவும் கால்பந்து விளையாடினேன். இப்போதும் கூட நாம் போட்டி ஒன்றுக்கு முன்னர் உடற்பயிற்சியாக கால்பந்தையே ஆடுகிறோம். கால்பந்து உண்மையில் பொழுதுபோக்கான விளையாட்டாகும்.
ரொனால்டோ விளையாடாததற்கு எதிராக வழக்கு தொடரும் ரசிகர்கள்
தென் கொரியாவில் நட்புறவு போட்டி ஒன்றில் ஆடிய ஜுவன்டஸ்……..
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் முதலாவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி எது? விருப்பமான உலகக் கிண்ண ஞாபகம்?
கடந்த 1998 மற்றும் 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணங்களை எனக்கு ஞாபகமிருக்கிறது. அந்தக் காலத்தில் பிரேசில் ஆடும் முறையை பார்க்க அதிக விருப்பம். ரொனால்டோவை நான் பார்த்தேன். உண்மையிலேயே அவர் அற்புதமானவர். அவரது திறமையை அவர் சிறந்த முறையில் கையாள்வதை நான் பார்த்தேன். உண்மையிலேயே அவர் நிகரற்ற வீரர்.
இதுவரை உங்களது விருப்பத்திற்குரிய வீரர் யார்?
ரொனால்டோ, ரொனால்டினோ, ஒலிவர் கான், லூகா மொட்ரிஜ், இனியெஸ்டா, மெஸ்ஸி மற்றும் கிறிடியானோ ரொனால்டோ. அவர்களில் கிறிஸ்டியானோ அதிக முன்னிலையில் இருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு உறுதியை ஒப்பிடக்கூடிய ஒருவர் இல்லை. அவரது ஈடுபாட்டை ஒவ்வொரு போட்டியிலும் பார்க்க முடிகிறது.
நீங்கள் நினைக்கின்ற வகையில் நல்ல விளையாட்டு வாழ்வொன்று இருப்பது யாருக்கு? லியொனல் மெஸ்ஸியா இல்லை கிறிஸ்டியானோ ரொனால்டோவா?
ரொனால்டோ. எனது எண்ணத்தின்படி அவர் அதிக சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அவைகளை வென்றிருக்கிறார். அவர்தான் முழுமையான வீரர் என்று நான் நினைக்கிறேன். அவரது விளையாட்டு பாணியை சமப்படுத்த முடியுமான யாருமில்லை. நான் கூறியதுபோல் அவரது ஆட்டம் அற்புதமானது. அவர் மக்களுக்கு முன்மாதிரியானவர். அதிகமான வீரர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு தலைவர். நான் அதனை அதிகம் விரும்புகிறேன். அவரது விளையாட்டுப் பற்றி எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.
ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவரும் தற்போது 34 மற்றும் 32 வயது வீரர்கள். நீங்கள் நினைக்கின்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் அந்த இடத்திற்கு யார் வருவார்கள்? ஹெசாட், ம்பாப்பே, நெய்மார், பொக்பா, சலாஹ் அல்லது வேறு வீரர் ஒருவரா?
ம்பப்பே முக்கிய இடத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். 2018 உலகக் கிண்ணத்தின்போது ஆர்ஜன்டீனாவுடனான போட்டியின்போது அவர் விளையாடிய முறை உண்மையிலேயே அபாரமானது. அதனை மறக்க முடியாது. சிறந்த வீரராவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
நீங்கள் நினைக்கும் வகையில் இந்திய கால்பந்து அணி ஒன்று பிஃபா உலகக் கிண்ணத்திற்கு வருவதற்கு எத்தனை காலம் எடுக்கும்? குறிப்பாக 2026 உலகக் கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது நிலையில் அது எவ்வாறு உள்ளது?
உண்மையில் அதிக தூரம் இல்லை. நாம் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் எமது கால்பந்து விளையாட்டை அதிகம் மேம்படுத்தி இருக்கிறோம். புதிய வீரர்கள் கால்பந்து விளையாட்டின் பயணத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எமது தலைவர் சுனில் சேட்ரி அணியை மிகவும் திட்டமிட்ட வகையில் வழிநடத்துகிறார். எமக்கு மிக விரைவில் உலகக் கிண்ணத்தில் ஆட முடியும் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய அணியின் பலம்மிக்கவரான சுனில் செட்ரிக்கு உலகக் கிண்ணம் ஒன்றில் விளையாடுவதற்கு வாய்ப்பு ஒன்று கிடைக்காவிட்டால் அது மிகப்பெரிய இழப்பாக இருக்கும் தானே?
அது மிகவும் கவலைக்குரிய விடயம். அவர் எமது நாட்டிற்காக பெரும் சேவையை ஆற்றி இருக்கிறார். அந்த சந்தர்ப்பம் யாருக்காவது கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதி உடையவர் அவர் தான். அணி அவருக்காக ஆடி உலகக் கிண்ணத்திற்கு தகுதியை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் உண்மையிலேயே சம்பியனாவார்.
இந்தியாவை தவிர்த்து உங்களுக்கு விருப்பமான அணி ஒன்று இருக்கிறதா? நாடுகள் அல்லது கழகம்?
போர்த்துக்கல் விளையாடுவதைப் பார்க்க நான் அதிகம் விரும்புகிறேன். அவர்கள் அவர்களிடம் இருக்கும் வளங்களை கிறிஸ்டியானோ ரொனால்டோவை மையமாக வைத்து முறையான வகையில் கையாள்கின்றனர். அவர்கள் சரியான பாணியில் மற்றும் நம்பிக்கையுடன் விளையாடுகின்றனர். அவர்கள் விளையாடுவதை பார்க்க நான் விரும்புகிறேன். இல்லையெனில் திறமை அடிப்படையில் பிரான்ஸ் முன்னிலையில் உள்ளது. நான் தற்போது ஜுவன்டஸ் அணிக்கே ஆதரவு அளிக்கிறேன். அது கிறிஸ்டியானோ காரணமாக. நான் அவர் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் ஆதரவு வழங்குகிறேன்.
உலகக் கிண்ண தகுதி காண் இரண்டாம் சுற்றில் இலங்கை H குழுவில்
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக்…….
நீங்கள் எந்த வகையான கால்பந்து வீரர்? உங்களுக்கு எந்த வீரரின் பண்புகள் இருக்கின்றன?
நான் எல்லா இடத்திலும் ஆடுகிறேன்! (சிரித்துக்கொண்டே) நான் தாக்குதல் மத்தியகள வீரராக அல்லது விங்கர் ஆகவே அதிகம் ஆடுகிறேன். ஏனென்றால் பந்தை எடுத்துக் கொண்டு ஓட நான் விரும்புகிறேன். நான் புள்ளிகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். நான் பந்தை முறையாக வீரர்களுக்கு செலுத்தி விளையாடுவதற்கு விரும்புகிறேன். என்னை எந்த வீரருக்கும் ஒப்பிட முடியாது என்று நான் நினைக்கிறேன். நான் அவர்களின் நூற்றுக்கு ஒன்று கூட இல்லை. நான் ஆடுவது பொழுதுபோக்கிற்கு மாத்திரம் தான்.
நீங்கள் இப்போது எவ்வளவுக்கு கால்பந்து போட்டிகளை பார்க்கின்றீர்கள்?
சாதாரணமாக நான் கால்பந்து போட்டிகளை பார்க்கிறேன். கால்பந்து எனக்கு விறுவிறுப்பை தருகிறது. நான் அதற்கு விருப்பம்.
நீங்கள் தற்போது இந்திய சுப்பர் லீக் போட்டியில் எப்.ஏ. கோவா அணியின் இணை உரிமையாளர். நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடைபெற்ற பின் கால்பந்தில் அதிகம் ஈடுபடுவீரர்கள் என்று நீங்கள் நினைப்பதுண்டா?
ஆம். நான் கால்பந்தில் ஈடுபடுவேன் என்று நினைக்கிறேன். கால்பந்து விளையாட்டு இந்தியாவில் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. அது மேலும் அதிகரிப்பதாயின் அதனை நான் விரும்புகிறேன். அது மிகப்பெரிய விடயமாக இருக்கும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<