டி20 அரங்கில் டில்சானின் சாதனையை முறியடித்த கோஹ்லி

4060
© GettyImage

இருதரப்பு தொடருக்காக ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவுள்ளது. 

குறித்த இருதரப்பு தொடரின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டி நேற்று (03) அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெற்றது. குறைந்த ஓட்டங்களுக்குள் நிறைவடைந்த குறித்த போட்டி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது

அறிமுக வீரரின் அசத்தலில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு……

இறுதி வரை விக்கெட் மழைகளால் பொழிந்த குறித்த போட்டியின் இறுதியில் சுற்றுலா இந்திய அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பாக ரோஹிட் சர்மா அதிக படியான ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

இரண்டாவதாக அணித் தலைவர் விராட் கோஹ்லி 29 பந்துகளில் 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த 19 ஓட்டங்களுக்குள் கோஹ்லி ஒரு பௌண்டரியைப் பெற்றுக்கொண்டார். குறித்த பௌண்டரியின்  மூலம் இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்சானின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.

டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 2006ஆம் ஆண்டு டி20 அறிமுகம் பெற்ற இலங்கையின் திலகரத்ன டில்சான் 80 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1,889 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 223 பௌண்டரிகளுடன் கடந்த 2016ஆம் ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.   

அன்றிலிருந்து நேற்று (03) வரையில் டில்சான் பெற்றுக்கொண்ட 223 பௌண்டரிகளும் டி20 சர்வதேச அரங்கில் தனிநபர் பெற்றுக்கொண்ட அதிக பௌண்டரிகளாக காணப்பட்டது. ஆனால், தற்போது விராட் கோஹ்லி குறித்த சாதனையை மூன்று வருடங்களின் பின்னர் முறியடித்துள்ளார்.  

ஒரே போட்டியில் மூன்று இந்தியர்களின் சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித்

கிரிக்கெட் உலகில் எதிர்பார்ப்பு மிக்க ஆங்கிலேயர்களின் ஆஷஷ்…

கடந்த 2010ஆம் ஆண்டு டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற விராட் கோஹ்லி இதுவரையில் 68 டி20 சர்வதேச போட்டிகளில் 224 பௌண்டரிகளை குவித்து இவ்வாறு டில்சானின் சாதனையை முறியடித்து டி20 சர்வதேச அரங்கில் அதிக பௌண்டரிகளை பெற்ற வீரராக மாறியுள்ளார்

குறித்த பட்டியலில் இலங்கை வீரர்கள் வரிசையில் டில்சானுக்கு அடுத்தாக 55 போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜெயவர்தன 173 பௌண்டரிகளுடன் 12ஆவது இடத்தில் காணப்படுகின்றார். மஹேலவை தொடர்ந்து 139 பௌண்டரிகளுடன் 23ஆவது இடத்தில் குமார் சங்கக்கார காணப்படுகின்றார். 

டி20 சர்வதேச அரங்கில் அதிக பௌண்டரிகள் பெற்ற வீரர்கள் (முதல் ஐந்து இடங்கள்)

  1. விராட் கோஹ்லி (இந்தியா) – 224 பௌண்டரிகள்
  2. திலகரத்ன டில்சான் (இலங்கை) – 223 பௌண்டரிகள் 
  3. மொஹமட் ஷஹ்ஷாட் (ஆப்கானிஸ்தான்) – 218 பௌண்டரிகள் 
  4. ரோஹிட் சர்மா (இந்தியா) – 209 பௌண்டரிகள் 
  5. மார்டின் கப்டில் (நியூசிலாந்து) – 200 பௌண்டரிகள்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<