இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் ஒன்பது தடவைகள் 150 ஓட்டங்களை கடந்ததன் மூலம் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட நட்சத்திரமான டொன் பிரட்மனின் சாதனை ஒன்றை 71 வருடங்களின் பின்னர் முறியடித்துள்ளார்.
இலங்கையில் T20 லீக் தொடரொன்று இல்லாமை கவலையளிக்கிறது – தசுன் ஷானக்க
இலங்கையைப் பொறுத்தமட்டில் வெளிநாட்டு T20 லீக் தொடர்களில் லசித் மாலிங்க…
தென்னாபிரிக்க – இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே நகரில் தற்போது நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் இன்று (11) முதலில் துடுப்பாடும் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி 150 ஓட்டங்களை கடந்திருந்தார். இதன் மூலம் கோஹ்லி, அணித்தலைவராக அதிக தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்கள் கடந்த வீரராகவே டொன் பிரட்மனின் சாதனையினை முறியடித்திருக்கின்றார்.
கிரிக்கெட் உலகம் இனம்கண்ட மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரான டொன் பிரட்மன் தான் ஆஸி. அணியினை தலைமை தாங்கும் போது எட்டு தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்கள் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க், இலங்கையின் மஹேல ஜயவர்தன, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா மற்றும் தென்னாபிரிக்க அணியின் கிரேம் ஸ்மித் ஆகியோர் ஏழு தடவைகள் அணித்தலைவர்களாக டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்கள் கடந்து சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலிய வீரரான ரிக்கி பொன்டிங்கின் அணித் தலைவராக டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் பெற்ற சாதனையினையும் சமன் செய்திருக்கின்றார். தற்போது இரண்டு வீரர்களும் அணித் தலைவர்களாக டெஸ்ட் போட்டிகளில் 19 தடவைகள் சதம் பெற்றிருக்கின்றனர்.
மறுமுனையில், கோஹ்லி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தற்போது பெற்றிருக்கும் சதம் இந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட முதல் சதமாகும். இதற்கு முன்னர் இந்த ஆண்டு எட்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கும் கோஹ்லி 2 அரைச்சதங்களை மட்டும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க