இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய (30) லீக் ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி அரைச்சதம் அடித்தன் மூலம் உலகக்கிண்ண தொடரில் தொடர்ச்சியாக அதிக அரைச்சதங்கள் பெற்றவர் எனும் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளதுடன், இரண்டாவது வீரராகவும் குறித்த பட்டியலில் தடம் பதித்துள்ளார்.
12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இத்தொடரின் 38 ஆவது லீக் போட்டி இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (30) பேர்மிங்ஹமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்தது.
இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை அதிகரித்த இங்கிலாந்து
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 38ஆவது லீக் போட்டியில்…..
இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி அரைச்சதம் கடந்து 76 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். நடப்பு உலக்கிண்ண தொடரில் இந்திய அணி இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் மாத்திரம் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி அரைச்சதம் பெறவில்லை.
அதன் பின்னர் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைச்சதம் கடந்தார். 14 ஆவது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 82 ஓட்டங்கள், 22 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 77 ஓட்டங்கள், 28 ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 67 ஓட்டங்கள், 34 ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 72 ஓட்டங்கள் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 66 ஓட்டங்கள் என்றவாரு ஐந்து அரைச்சதங்கள் தொடர்ச்சியாக பெறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் (2015) ஐந்து தொடர்ச்சியான அரைச்சதங்கள் விளாசியிருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 95 ஓட்டங்கள், இலங்கை அணிக்கு எதிராக 72 ஓட்டங்கள், பாகிஸ்தான் அணிக்கெதிராக 65 ஓட்டங்கள், இந்தியா அணிக்கெதிராக 105 ஓட்டங்கள், மற்றும் நியூசிலாந்து அணிக்கெதிராக 56 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) பெறப்பட்டதாகும்.
இதனையே தற்போது விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார். விராட் கோஹ்லிக்கு முன்னர் உலகக்கிண்ண தொடரில் தொடர்ச்சியாக அதிக அரைச்சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் மாத்திரமே ஐந்து அரைச்சதங்கள் விளாசியிருந்தார். ஆனால் நேற்று முதல் குறித்த பட்டியலில் விராட் கோஹ்லி இரண்டாவது வீரராக இடம்பெற்றுள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் விஜய் சங்கர்
கால் விரல் உபாதைக்கு ஆளாகிய இந்திய அணியின் சகலதுறை…..
மேலும் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு பெரும்பாலும் தகுதி பெறும் என்ற நிலையில் அவ்வணிக்கு லீக் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கின்றது. நாளை (02) பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடவுள்ள நிலையில் அப்போட்டியில் விராட் கோஹ்லி அரைச்சதம் கடக்கும் நிலையில் குறித்த பட்டியல் மூலமாக சாதனை படைப்பார்.
இந்நிலையில் இந்திய அணி சார்பாக உலகக்கிண்ண தொடரில் தொடர்ச்சியாக அதிக அரைச்சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். இதற்கு முன்னர் மொஹமட் அஸார்டீன் 1992 உலகக்கிண்ண தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரைச்சதங்கள் விளாசியிருந்தார்.
இதேவேளை நேற்றைய அரைச்சதத்தின் மூலம் விராட் கோஹ்லி அணித்தலைவராகவும் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஒரு அணித்தலைவராக உலகக்கிண்ண தொடரில் தொடர்ச்சியாக அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரராக மாறியுள்ளார். இதற்கு முன்னர் ஆஸி. அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் மற்றும் பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் ஆகியோர் தொடர்ச்சியாக நான்கு அரைச்சதங்கள் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<