அணியின் வெற்றிக்காக விமானத்தில் தியாகம் செய்த கோஹ்லி – அனுஷ்கா

1423

முதலாவது திருமண ஆண்டு பூர்த்தியை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி அனுஷ்கா சர்மா தம்பதியினர் கிரிக்கெட் உலகில் வைரலாகும் அளவுக்கு திருமண நாளிலேயே தமது அணிக்கான தியாகம் ஒன்றை செய்துள்ளனர்.

விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் ….

சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 10 வருட தீராத பசியை தீர்திருக்கின்றது.

முதல் டெஸ்ட் போட்டியானது, கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை அடிலெட்டில் நடைபெற்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியினுடைய வெற்றியானது இந்திய அணிக்கு 10 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாக மாறியிருக்கின்ற அதேவேளை, அவுஸ்திரேலிய மண்ணில் தொடரின் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருக்கின்ற முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

அதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட்டில் பலமான அணிகளாக காணப்படும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரே ஆண்டில் டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமையையும் விராத் கோஹ்லி தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லியை பெறுத்தவரையில் மைதானத்தில் கொஞ்சம் குறும்புத்தனம் கொண்டவர். இதனை வெளிப்படையாக ஒவ்வொரு போட்டிகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.  

அதிலும், டெஸ்ட் தரப்படுத்தல்களில் முன்னிலை பெற்றுள்ள அணிகளுடன் விளையாடு போது இன்னும் அதிகமாக குறும்புத்தனம் உடையவராக கோஹ்லி இருப்பார். எதிரணியினரின் ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீழ்த்தப்படும் போது விராத் கோஹ்லி அடையும் சந்தோசத்தை பார்க்கும் போது, எதிரணியினருக்கும், எதிரணியின் ஆதரவாளர்களுக்கும் அவர் மீது பாரிய வெறுப்பு ஒன்று ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் ஒரு புரம் இருந்தாலும், விராத் கோஹ்லி மைதானத்துக்கு வெளியில் செயற்படுகின்ற விதம் வெறுப்பு ஏற்பட்டவர்களையும் அன்பின் பால் ஈர்க்கின்றது.

அப்படி என்ன செய்கின்றார்..?

மைதானத்துக்கு வெளியில் விராத் கோஹ்லியினுடைய அன்பு, மனித நேயம், இந்திய அணியின் வெற்றிக்கு செய்யும் தியாகங்கள் ஆகியவை அவர் மைதானத்தில் காட்டும் குறும்புத்தனத்தை அடியோடு மறக்கடிக்கச் செய்கின்றது.

இரண்டு சாதனைகளை நிலைநாட்டிய கோஹ்லிக்கு ஒரு மோசமான பதிவு

இந்திய அணித்தலைவரும், முன்னணித் துடுப்பாட்ட…

இவ்வாறானதொரு சம்பவம் விமானத்தில் நடைபெற்றிருக்கிறது என்றால் நம்புவீர்களா..?

நாளை (14) நடைபெறவுள்ள இந்தியஅவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றுவதற்கான இந்திய அணி நேற்று முன்தினத் (11) விமானம் மூலமாக பேர்த் நகரை சென்றடைந்தது.

கிரிக்கெட் வீரர்களுக்காக விஷேடமாக, விமானத்தில் உயர்தர வகுப்புக்களை கொண்ட விமான சீட்டுக்களே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் பதிவு செய்யப்படும். குறித்த உயர்தர வகுப்பில் சகலவிதமான வசதிகளும் காணப்படும். இவ்வாறு பதிவு செய்வதன் நோக்கம், வீரர்கள் குறித்த நகரத்தை சென்றடைந்தவுடன் பிரயாணத்தின் மூலம் களைப்படையாமல் தங்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளில் தீவிரமாக அக்கரை காட்ட வேண்டும் என்பதற்காகும்.

இருந்தாலும், எதிர்பாராத விதமாக ஒரு சில காரணங்களினால் பேர்த் நோக்கி செல்லும் விமானத்தில் இவ்வாறான உயர்தர வகுப்பு பயணச்சீட்டுக்களை பெற முடியாமல் போனது.

இதன் காரணமாக சிக்கன வகுப்பு பயணச்சீட்டுக்களே அனைத்து வீரர்களுக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும், விராத் கோஹ்லிஅனுஷ்கா சர்மா ஜோடிக்கு குறித்த விமானத்தில் காணப்படும் சொகுசு கூடிய சீட்டுக்களே வழங்கப்பட்டிருந்தன.

நியூசிலாந்து அணியுடன் இலங்கையின் கடந்தகாலப் போட்டிகள் எப்படி இருந்தன?

கடந்த ஆண்டில் மிகவும் கசப்பான அனுபவங்களை ……

இதனை அறிந்த விராத் கோஹ்லி தனது மனைவின் பூரண விருப்பத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்ட சொகுசு வாய்ந்த பயணச்சீட்டுக்களை இந்திய அணியின் நன்மை கருதி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வழங்கிவிட்டு, கோஹ்லியும் அனுஷ்காவும் சிக்கன வகுப்பில் பணயம் செய்துள்ளனர்.

காரணம், இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களே மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தனர். அதன் காரணமாக இரண்டாவது டெஸ்டிலும் தங்கள் அணி வெற்றி பெற வேகப்பந்து வீச்சாளர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதை உணர்ந்த விராத் கோஹ்லி மனைவியின் சம்மதத்துடன் இந்த செயலில் ஈடுபட்டிருந்தார்.

கோஹ்லியின் இந்த செயற்பாடானது, தற்பொழுது இந்திய இரகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஏனைய நாட்டு இரசிகர்கள் மத்தியிலும் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Embed the link with this caption – https://www.thepapare.com/photos/ – புகைப்படங்களைப் பார்வையிட  

இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லி மற்றும் இந்திய பொலிவூட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணம் முடித்து ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் நாளில் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றமை வியக்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கல் வோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு நான் சாட்சியாக இருக்கின்றேன். தனக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை விராத் கோஹ்லி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வழங்கியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களுக்குரிய வசதிகள் சரியாக வழங்கப்படவில்லை என்றால், ஆஸி. அணியினர் இதனை சாதகப்படுத்திவிடுவர். இதனை சரியாக முறையில் கோஹ்லி அணுகியுள்ளார்என்று குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<