T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கோஹ்லி!

173

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட்கோஹ்லி சர்வதேச T20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகஉத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி T20 உலகக்கிண்ணஇறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியஅணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இந்தப் போட்டியில் விராட் கோஹ்லி 76 ஓட்டங்களை விளாசிஅணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததுடன், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

போட்டி நிறைவடைந்த பின்னர் விராட் கோஹ்லி தன்னுடையஓய்வு தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட விராட் கோஹ்லி,

இது நான் இந்தியாவுக்காக வியைளயாடும் கடைசி T20I போட்டி. இதுவொரு பகிரங்கமான இரகசியம். நாம்வெற்றிபெறவில்லை என்றால் இந்த அறிவிப்பைவெளியிட்டிருக்க மாட்டேன். எதிர்கால சந்ததியினர் T20 கிரிக்கெட் விளையாடுவதற்கு இதுதான் சரியான தருணம். ஐசிசி உலகக்கிண்ண வெற்றி எம்முடைய நீண்டகாத்திருப்பாகும். நான் ஆறாவது T20 உலகக்கிண்ணத்தில்விளையாடுகிறேன். ரோஹித் சர்மா 9வது உலகக்கிண்ணத்தில்விளையாடுகிறார். எனவே அவருக்கு இதுவொரு மிகப்பெரியவிடயம். அவர் அதற்கு தகுதியானவர்என்றார்

விராட் கோஹ்லி 2010ம் ஆண்டு T20I கிரிக்கெட்டில்அறிமுகமானார். இவர் இதுவரை 125 போட்டிகளில் விளையாடி4188 ஓட்டங்களை குவித்துள்ளார். கோஹ்லி இதில் 38 அரைச்சதங்களை விளாசியுள்ளதுடன், ரோஹித் சர்மாவுக்குஅடுத்தப்படியாக T20I கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைபெற்ற இரண்டாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<